
ஒரு சீரீஸ் எப்படி எடுக்கக் கூடாது என்று தெரிய வேண்டுமா?
ரொமாண்டிக் காமெடியில் ரொமான்ஸும் இல்லாமல் காமெடியும் இல்லாமல் எடுப்பது எப்படி?
எந்தவொரு டிவிஸ்டும் இல்லாமல் ஒன்பது எபிசோட்கள் எடுப்பது எப்படி?
நடிப்பது என்றால் என்ன என்று நடித்தே பார்ப்பவர்களைப் புரிந்து கொள்ள வைக்குமாறு சிறுபிள்ளை தனமாக நடித்துக் கொடுமைப்படுத்துவது எப்படி?
இருபது நிமிடங்கள் இரண்டு மணி நேரம் போல உணர வைப்பது எப்படி?
நகைச்சுவை என்ற பெயரில் நடிப்பவர்கள் மட்டும் சிரித்து கொள்வது எப்படி?
ஒரு திருமணமான இளைஞன் வகை தொகை இல்லாமல் வழிவதும் அதற்கு பெண்கள் மயங்குவதும் எப்படி?
இந்தக் கதையை சொல்லி இதன் இயக்குனர் அந்த நிறுவனத்திடம் ஓகே செய்தது எப்படி?
டைட்டில் இசை மட்டும் நன்றாக இருந்தால் போதும் மற்ற இடங்களில் பல படங்களில் இருந்து இசையைப் பசையெடுத்து பயன்படுத்துவது எப்படி?
ஒரு நல்ல ஹேசன் அப்துல் வகாப்பின் பாடல் இதில் பயன்படுத்தப்பட்டது எப்படி?
பார்க்கும் பெண்கள் அனைவரும் நாயகன் கண்ணா ரவியிடம் மயங்குவதும் அவர் கடைசியில் உலகம் சுற்றும் வாலிபன் எம் ஜி ஆர் போல மனம் மாற்ற முயற்சிப்பதும் எப்படி?
கடைசியாக...
ஏஞ்சலின் என்ற அந்த அழகான பெண்ணிற்காக மட்டும் இதைப் பார்க்க துணிந்த எனக்கு கருட புராணத்தின் படி என்ன தண்டனை கிடக்கும்? இதைப் பார்த்த கொடுமைக்கும் மேலே?
ஏஞ்சலின் நீங்க ஷோ ஹாஸ்டாக மட்டும் இருந்து விடுங்கள்... அது தான் சானல்களுக்கும் ரசிகர்களுக்கும் நீங்கள் செய்யும் மிகப் பெரிய உபகாரம்.