பிச்சைக்காரன் கெட்டப்பில் மனோஜ்... ஷாக்கில் விஜயா... 'சிறகடிக்க ஆசை' சீரியல் புரோமோ!

Siragadikka aasai
Siragadikka aasai

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னனி இடத்தை பிடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்தடுத்து முக்கிய ட்விஸ்ட்களை கொண்டுள்ளது.

கடந்த வாரம் சீரியலில் முத்துவின் பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இருந்தது. மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். இதனால் விஜயா, மீனாவின் நகையை கொடுத்தார். ஆனால், விஜயா அடமானம் வைக்காமல் விற்று விட்டார். இதனால் வீட்டில் கலேபரமாக மனோஜ் உண்மையை ஒப்புக்கொண்டார். அவருக்கு பின் விஜயா இருப்பதையும் குடும்பத்தினர் தெரிந்துகொள்ள அண்ணாமலை மனோஜை புரட்டி எடுக்கிறார். அதோடு அண்ணாமலை, விஜயாவிடம் இனி பேச மாட்டேன், தண்ணீர் கூட உன்னிடம் வாங்கி குடிக்க மாட்டேன் என கூறுகிறார். உடனே விஜயா அறைக்கு சென்றவர் தான் வெளியே வரவில்லை.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சின்ன சின்ன அழகான விஷயங்கள் நடந்துள்ளது. பாட்டி மகன், பேரன்களுடன் சாப்பிடும்போது தனது காதல் கதையை கூறுகிறார். பின் மனோஜ் நகைக்கு செல்ல கைக்கு கிடைத்த கடிதத்தை கண்டு பயப்படுகிறார், ஆனால் ரோஹினி இதெல்லாம் யாரோ உண்மையை ஏமாற்ற செய்வது என கூறி ஆறுதல் செய்கிறார். இன்னொரு பக்கம் முத்து-மீனா 2வது காரை வாங்கி வீட்டிற்கு வருகிறார்கள். பாட்டி, அண்ணாமலை என எல்லோரும் சந்தோஷப்பட விஜயா வழக்கம் போல் பேசுகிறார். இதனால் அவர் பாட்டியிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.

இதையும் படியுங்கள்:
'ப்ளாக் பஸ்டர்' பிறந்தநாள் பரிசு... மகிழ்ச்சியில் தனுஷ் போட்ட பதிவு!
Siragadikka aasai

இப்போது கதையில் நகை பிரச்சனை ஒருவழியாக முடிந்துள்ளது, அடுத்து ஸ்ருதி குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரச்சனை வரும் என தெரிகிறது. இன்னொரு பக்கம் மனோஜ் கைக்கு கிடைத்த கடிதம் யார் அனுப்பியது என்ன பிரச்சனை வரப்போகிறது என்பது தெரியவில்லை. நாளைய எபிசோட் முத்து-மீனா 2வதாக புதிய கார் வாங்கி அதனை ஓட்ட ஒரு நபரையும் போட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரொமோவில் முத்து-மீனா ஒரு உண்டியுடன் வீட்டிற்கு வர விஜயா அதனை பார்த்து இது நடக்கும் என நினைத்தேன் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என நினைக்கவில்லை என கூற அண்ணாமலை என்ன என்று கேட்கிறார். அதற்கு விஜயா அதான் தெருதெருவாக பிச்சை எடுத்து வீட்டு கட்ட போறாங்களா என கேட்க உடனே மனோஜ் வாசலில் பிச்சை எடுப்பது போல் அம்மா என கூப்பிடுகிறார். உடனே முத்து, அம்மா சொன்னது சரி தான் பிச்சைக்காரன் வந்துட்டான் என முத்து கூறுகிறார், விஜயா ஷாக் ஆகிறார்.

logo
Kalki Online
kalkionline.com