சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தனது மனைவியை எண்ணி குடித்துவிட்டு ரகளை செய்கிறார். இதனால், முத்துவுக்கும் அண்ணாமலைக்கும்தான் பெரிய தலைவலியாக அமைந்திருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் பல பொய்களை சொல்லி ரோஹினி திருமணம் செய்தார். இது தெரியாமல், விஜயா அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்தார். அதேபோல், முத்து ரோஹினியின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வரப் போராடுகிறார். ஆனால், ரோஹினி எப்படியாவது தப்பித்துக்கொண்டே வந்தார். ஆனால், முத்து எந்த முயற்சியும் எடுக்காமல், ரோஹினியின் உண்மை முகம் தானாகவே வெளிப்பட்டுவிட்டது.
ரோஹினியின் பணக்கார நாடகம் வீட்டில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இதனால், கடும்கோபத்தில் விஜயா ரோஹினியை வீட்டைவிட்டு வெளியேற்றினார்.
அப்போது மனோஜ் எதுவும் செய்ய முடியாமல், விஜயா பேச்சுக்கு தலையாட்டி ரூமுக்குள் சென்றுவிட்டார்.
ஆனால், நேற்று மனோஜ் அதிகம் குடித்துவிட்டு நிலை தெரியாது தடுமாறிக் கொண்டிருந்தார். அவரின் நண்பர் மனோஜை அழைத்துக்கொண்டு வரும்போது போலீஸ் பிடித்துவிடுகிறது. போலீஸ் அவர் நண்பரையும் ஊத சொல்கிறது. உடனே மனோஜ் அந்த போலீஸ்காரரிடம் சண்டைக்குப் போகிறார். இதனால், போலீஸ் மனோஜை கைது செய்கிறது. போலீஸ் ஸ்டேஷன் சென்றும் சும்மா இருக்காமல் போலீஸை வம்பிழுக்கிறார். கோபத்தில் மனோஜின் சட்டையை கழட்டி ஓரமாக உட்கார வைத்து விட்டார்கள்.
ஆனாலுமே மனோஜ் அடங்காமல், என் தம்பி யார் தெரியுமா? அவன் வந்தால் ரகளையே நடக்கும் தெரியுமா? என்று அலப்பறை செய்து கொண்டிருந்தார். மற்றொரு பக்கம் மனோஜ் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று முத்துவும் அண்ணாமலையும் கவலை அடைகிறார்கள். இன்றைய எபிசோட்டில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் விஷயத்தை அவருடைய நண்பர், முத்து- அண்ணாமலை இடம் சொன்னவுடன் வீட்டில் எல்லோருமே பதறுகிறார்கள். பின் முத்து- அண்ணாமலை போலீஸ் ஸ்டேஷன் வருகிறார்கள். அங்கு மனோஜ் அலப்பறை செய்கிறார். இதைப் பார்த்து அண்ணாமலை மிகுந்த மன வேதனையில் போலீஸிடம் மனோஜ் நிலைமையை எடுத்துக் கூறுகிறார்.
அங்கு சரியாக அருண் வருகிறார். முத்துவின் அண்ணன் என்று தெரிந்து விடக்கூடாது என்று முடிவெடுக்கிறார். ஆனால், அங்கு எஸ் ஐ, மனோஜை வெளியே விட சொல்கிறார்.
பின் வீட்டிற்கு வந்தும் அலப்பறை செய்கிறார் மனோஜ்.