ஈஸ்வரிக்கு ஆதரவாக சாட்சி சொன்ன மயூ... ஷாக்கான ராதிகா..!

Baakiyalakshmi
Baakiyalakshmi
Published on

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரிக்கு எதிராக சாட்சி சொன்ன மயூவால் ராதிகா அதிர்ச்சியடைந்துள்ளார்.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராதிகா கரு கலைந்த பிறகு பல ட்விஸ்ட்களை கொண்டிருக்கிறது.

ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகாவும், கமலாவும் கோபியிடம் போட்டுக்கொடுக்க, தனது தாயை தவறாக நினைத்துக் கொள்கிறார் கோபி. இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரிதான் ராதிகாவை கீழே தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்குச் செல்கிறார். மேலும், தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார். வீட்டில் தினமும் அழுது கொண்டிருந்த ஈஸ்வரியை சமாதானம் செய்து, பாக்கியா வெளியூருக்கு காரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சி படுத்துகிறார்.

மேலும், ஈஸ்வரியின் பழைய சிநேகிதியை கண்முன் கொண்டு வந்து சர்ப்ரைஸ் செய்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஈஸ்வரி, மலரும் நினைவுகளாக தோழியிடம் பலவற்றை பகிர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, கஷ்டத்தின் எல்லைக்குச் சென்ற கோபி, மீண்டும் போதையை கையிலெடுக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, ராதிகா கொந்தளித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
சூர்யா பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்காக காத்திருக்கும் ட்ரீட்... என்ன தெரியுமா?
Baakiyalakshmi

போதையில் கமலாவை திட்டிய கோபியால் பிரச்சனை முட்டுகிறது. இதனால் பழி வாங்க வேண்டும் என நினைத்த கமலா, ஈஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து பாக்கியலட்சுமி இல்லத்திற்கு வந்த போலீசார், ஈஸ்வரியை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். தொடர்ந்து நேற்று கோர்ட்டில் ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இதனிடையே அடுத்த இரு தினங்களுக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாக்கியாவை பார்க்கும் மயூ, பாட்டி தன்னுடைய அம்மா ராதிகாவை தள்ளி விடவில்லை என்று கூறுவதாக காணப்படுகிறது. இதையடுத்து பழனிச்சாமி உதவியுடன் வழக்கறிஞரை சந்தித்து இந்த விஷயத்தை பாக்கியா கூறுகிறார். அந்தப் பெண், இதேபோல நீதிமன்றத்திலும் கூறினால், ஈஸ்வரியை எளிதாக வெளியில் எடுததுவிடலாம் என்று அவர் கூற, சின்னப்பெண்ணை எப்படி நீதிமன்றத்திற்கு அழைத்துவருவது என்பதாக பாக்கியா கேட்பதாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com