சூர்யா பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்காக காத்திருக்கும் ட்ரீட்... என்ன தெரியுமா?

Actor Surya
Actor Surya
Updated on

நடிகர் சூர்யா பிறந்தநாள் வரவுள்ளதையடுத்து அவரது ரசிகர்களுக்காக சூப்பர் அப்டேட் ஒன்று காத்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் ஆக்சன் ஹீரோவாக, மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது 'கங்குவா' திரைப்படம். இத்திரைப்படத்தை யு.வி.க்ரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

கிட்டதட்ட 2 1/2 வருடமாக இந்த படம் ப்ரோடக்ஷனிலேயே இருக்கிறது. படத்தின் அப்டேட் எப்போது வரும், எப்போது ரிலீஸ் ஆகும் என காத்துகொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது குட்நியூஸ் வந்துள்ளது. அதாவது, கங்குவா படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகிறது எனப் படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே, ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் அதே தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால் 2 படம் போட்டி போடும் என தெரிகிறது.

இதை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு வழியாக கங்குவா அப்டேட் வந்தாச்சு என கொண்டாடி வருகின்றனர். மேலும் தற்போது சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மற்றொரு ட்ரீட் வந்துள்ளது. இந்த நிலையில், கங்குவா படத்தின் ட்ரைலர் குறித்து மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கங்குவா படத்தின் ட்ரைலர் தற்போது தயாராகிவிட்டதாகவும், வருகிற ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று படத்தின் ட்ரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தனுஷின் ராயன் படத்துக்கு A சான்றிதழ்!
Actor Surya

இதுமட்டுமின்றி கங்குவா இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளதாம். முதல் பாகம் இந்த ஆண்டு வெளிவரும் நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு 2026ஆம் ஆண்டு துவங்கி, படம் 2027லில் வெளிவரும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com