மூன்று முடிச்சு சீரியல் அடுத்த திருப்பம்: ஜெயிலில் நந்தினிக்கு ஆபத்தா? காப்பாற்றுவாரா சூர்யா!

மூன்று முடிச்சு சீரியல்
மூன்று முடிச்சு சீரியல்
Updated on

சன் தொலைக்காட்சியில் நந்தன் சி முத்தையா இயக்கத்தில், எழுத்தாளர் ஆர்.குமரனின் திரைக்கதையில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான மூன்று முடிச்சு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஆகஸ்ட் மாதம் 2024ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. டிஆர்பியிலும் டாப்பில் கலக்கி வரும் இத்தொடர் தற்போது விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.

எதிர்பாராத சூழ்நிலையில் நிகழும் திருமணத்திற்குப் பிறகு நாயகன் மற்றும் நாயகியின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள், ஈகோ மற்றும் காதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தக் கதை நகர்கிறது. கிராமத்தில் வசித்த நந்தினி, தனது குடும்பத்தின் மகிழ்ச்சியை மட்டுமே முதன்மையாகக் கருதும் ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண். மறுபுறம் சூர்யா தனது தாயார் சுந்தரவல்லி மீதுள்ள மனக்கசப்புகள் காரணமாக அவரை வெறுக்கும் ஒரு பணக்கார கூட்டுக் குடும்பத்து இளைஞன். தாயைப் பழி வாங்கவும், அவருக்கு பிடிக்காத ஒன்றை செய்யவும் திட்டமிடும் சூர்யா, சூழ்நிலை காரணமாக நந்தினியை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்கிறான். ஆரம்பத்தில் இருவருக்கும் ஈகோ மற்றும் வெறுப்பு இருந்தாலும், சூர்யாவின் குடும்பத்தில் நந்தினி சந்திக்கும் சவால்களும், அதன் பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே மலரும் காதலும் தான் இந்தத் தொடரின் முக்கிய கதையாக நகர்கிறது.

கதாநாயகியாக நடிக்கும் சுவாதி கொண்டே மற்றும் கதாநாயகனாக நடிக்கும் நியாஸ் கான் ஆகியோரின் நடிப்பு சீரியலின் மிகப்பெரிய பலமாக உள்ளது. இவர்களின் எதார்த்தமான கெமிஸ்ட்ரி மற்றும் எமோஷனல் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்கின்றன. கதையும் தொய்வில்லாமல் அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளுக்கு இதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

முந்தைய எபிசோடுகளில் ஹேமாவின் மரணம் தொடர்பான சவால்கள் மற்றும் டி.என்.ஏ முடிவுகள் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஹேமாவின் இழப்புக்காக இரு குடும்பத்தினரும் சந்திக்கும் மன உளைச்சலும், அதனைத் தொடர்ந்து சுந்தரவல்லி மற்றும் நந்தினி இடையே நடக்கும் மோதல்களும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சூர்யா- நந்தினியின் காதலின் ஆழம் மற்றும் குடும்பத்திற்காக நந்தினி எதிர்கொள்ளும் தியாகங்கள் போன்றவை இந்த சீரியலின் பலமாகப் பார்க்கப்படுகிறது.

நந்தினிக்கு எதிராக தொடர்ந்து சதி செய்து வரும் பரமேஸ்வரியின் புதிய வேகம் கதையை வேகமாக நகர்த்துகிறது. இதற்கிடையில் நந்தினியை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கோர்ட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அந்த சமயத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பரமேஸ்வரி போலீஸிடம் நந்தினியை எங்க ஆட்கள் இருக்கும் செல்லில் போடுங்கள் அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல, போலீஸ் அதற்கு நிறைய செலவாகுமே என்று கூற முதலில் வேலையை முடியுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பரமேஸ்வரி சொல்கிறாள்.

கோர்ட்டில் நந்தினியை 3 நாட்களுக்கு வைத்து விசாரிக்கச் சொல்ல, நந்தினியும் சப் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு பரமேஸ்வரியின் ஆட்கள் நந்தினிக்கு தொல்லை கொடுக்கத் தயாராக காத்திருக்கிறார்கள். ஜெயிலில் ஒரே அறையில் தங்கியிருக்கும் பரமேஸ்வரியின் ஆட்களால் நந்தினி துன்புறுத்தப்படுவாளா? சூர்யாவும் அவருடைய வக்கீலும் ஃபோரன்சிக் ஆபீஸரைக் கண்டு முக்கியமான கைரேகை மற்றும் பெர்ஃப்யூமின் ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். கொலை செய்த  பெண்ணின் இடது கை ரேகை மட்டுமே கொலையான ஹரிதாவின் கழுத்தின் இரண்டு பக்கமும் பதிவாகியுள்ளது எப்படி? நந்தினி இந்த சூழலில் இருந்து எப்படி காப்பாற்றப்படப் போகிறாள்? சூர்யாவின் கடும் முயற்சியால் நந்தினி குற்றவாளி இல்லை என்ற உண்மை வெளிவருமா? அல்லது பரமேஸ்வரியின் ஆட்களால் துன்புறுத்தப்படுவாளா?

இதையும் படியுங்கள்:
இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் 12 படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள்: முழு விபரம்!
மூன்று முடிச்சு சீரியல்
logo
Kalki Online
kalkionline.com