

2020-ல் கொரோனா லாக்டவுன் சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டபோது, ஓடிடி (OTT) நிறுவனங்கள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றன. நஷ்டத்தைத் தவிர்க்க தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டு நல்ல லாபம் பார்த்தனர். இதனால் திரையரங்கு வருமானம் இரண்டாம் பட்சமானது. ஆனால், உலகம் பழைய நிலைக்குத் திரும்பிய பிறகு, மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் 'படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்தே ஓடிடி-யில் வர வேண்டும்' என்ற கட்டுப்பாட்டை விதித்தன. அதே நேரத்தில், ஓடிடி நிறுவனங்கள் சொந்தமாக எடுத்த படங்கள் நஷ்டமடைந்ததாலும், திரையரங்குகளில் ஓடாத பெரிய நடிகர்களின் படங்களால் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியதாலும் ஓடிடி வியாபாரத்தில் பெரிய சரிவு ஏற்பட்டது.
இந்தச் சரிவைத் தொடர்ந்து, ஓடிடி நிறுவனங்கள் தயாரிப்பாளர்களுக்குப் புதிய நிபந்தனைகளை விதிக்கத் தொடங்கின. திரையரங்கு வரவேற்பைப் பொறுத்தே தொகை, 4 வாரங்களுக்குள் தராவிட்டால் தொகையில் பாதி குறைப்பு போன்ற கெடுபிடிகளால் தயாரிப்பாளர்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகினர். மேலும், ஓடிடி நிறுவனங்கள் தங்களின் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் படங்களின் பட்டியலை முன்கூட்டியே திட்டமிட்டு லாக் செய்வதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் இயக்குநர்களுக்கு ஏற்படுகிறது.
இழப்புகளை சமாளிக்க ஓடிடி நிறுவனங்கள் தற்போது 'பிசினஸ் கட்' (Business Cut) என்ற புதிய அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளன. இதன் மூலம், படத்தின் 40 நிமிடக் காட்சிகளைப் பார்த்து, அதன் தரத்தை மதிப்பிட்ட பிறகே இனி தொகை முடிவு செய்யப்படுகிறது.
இந்த வாரம் பல்வேறு முன்னணி ஓடிடி (OTT) தளங்களில் மொத்தம் 12 திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. அவற்றின் தளவாரிப் பட்டியல் இதோ:
நெட்பிளிக்ஸ் - 2 படங்கள், 2 வெப் சீரிஸ்,
அமேசான் பிரைம் - 3 படங்கள்,
ஜியோ ஹாட் ஸ்டார் - 3 படங்கள்
சோனி லைவ் - 1 படம்,
ஆஹா தமிழ் - 1 வெப் சீரிஸ்
Voice Mails For Isabelle (திரைப்படம்)
வகை: ரொமாண்டிக் காமெடி டிராமா
மொழி: ஆங்கிலம் / தமிழ்
இயங்கும் நேரம்: 115 நிமிடங்கள்
Husbands in Action (திரைப்படம்)
வகை: ஆக்ஷன் காமெடி
மொழி: தென்கொரியன் / தமிழ்
இயங்கும் நேரம்: 107 நிமிடங்கள்
Oasis (வெப் சீரிஸ்)
வகை: டீன் மிஸ்ட்ரி த்ரில்லர்
மொழி: ஸ்பானிஷ் / தமிழ்
I Will Find You (வெப் சீரிஸ்)
வகை: க்ரைம் த்ரில்லர்
மொழி: ஆங்கிலம் / தமிழ் (8 எபிசோடுகள்)
Your Fault London (திரைப்படம்)
வகை: ரொமாண்டிக் டிராமா
மொழி: ஆங்கிலம் / தமிழ்
திரிஷ்யம் 3 (திரைப்படம்)
வகை: க்ரைம் த்ரில்லர்
மொழி: மலையாளம் / தமிழ்
இயங்கும் நேரம்: 160 நிமிடங்கள்
Mortal Kombat 2 (திரைப்படம்)
வகை: ஆக்ஷன் அட்வென்ச்சர்
மொழி: ஆங்கிலம் / தமிழ்
இயங்கும் நேரம்: 116 நிமிடங்கள்
கெணத்தைக் காணோம் (திரைப்படம்)
வகை: காமெடி டிராமா
மொழி: தமிழ்
Thukra Ke Mera Pyaar - சீசன் 2 (வெப் சீரிஸ்)
வகை: ரொமாண்டிக் டிராமா
மொழி: ஹிந்தி / தமிழ்
Save The Tigers - சீசன் 3 (வெப் சீரிஸ்)
வகை: காமெடி டிராமா
மொழி: தெலுங்கு / தமிழ்
அதிரடி (திரைப்படம்)
வகை: ஆக்ஷன் காமெடி மெலோ டிராமா
மொழி: மலையாளம் / தமிழ்
இயங்கும் நேரம்: 157 நிமிடங்கள்
Sshhh - சீசன் 3 (வெப் சீரிஸ்)
வகை: அடல்ட் காமெடி டிராமா
மொழி: ஹிந்தி / தமிழ் (5 எபிசோடுகள் - எபிசோடுக்கு 30 நிமிடங்கள்)