ஒவ்வொரு வாரங்களும் புதிய புதிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. அதிலும் குறிப்பாக பெரிய பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் திரைக்கு வரும் பொழுது எந்த அளவிற்கு ரசிகர்களுக்கு உற்சாகம் இருக்குமோ, அந்த அளவிற்கு ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களுக்கும் ரசிகர்களின் மத்தியில் உற்சாகமும் நல்ல வரவேற்பும் இருந்து வருகின்றன..! அப்படி பார்க்கும்போது இந்த வாரத்தில், ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களை இப்பதிவில் பார்ப்போம்.
கிங்டம்:
கௌதம் தின்னூரி இயக்கத்தில் கதாநாயகனாக விஜய் தேவர்கொண்டா மற்றும் கதாநாயகியாக பாக்கியஸ்ரீ போஸ் ஆகியோரின் நடிப்பில் உருவான கிங்டம் திரைப்படமானது கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி திரைக்கு வந்தது. மிரட்டலான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் தேவர்கொண்டா. இப்படமானது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் உலக அளவில் 82 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. படமானது இந்த வாரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
கெவி:
தமிழ் தயாளன் இயக்கத்தில், ஆதவன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவான கெவி திரைப்படமானது, கடந்த மாதம் ஜூலை 18-ஆம் தேதி திரைக்கு வந்தது. இப்படமானது கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைவாழ் மக்களின் கஷ்டங்களையும் துயரங்களையும் எடுத்துரைக்கிறது. அதேபோல் இந்தத் திரைப்படம் ஆனது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. இப்போது இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகியுள்ளது.
லவ் மேரேஜ்:
சண்முகப்பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், சத்யராஜ், ரமேஷ் தில்லக் போன்றோரின் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி திரைக்கு வெளிவந்த திரைப்படம் தான் லவ் மேரேஜ். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படமானது இந்த வாரத்தில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.
தண்டர்போல்ட்ஸ்:
மார்வெல் ஸ்டுடியோவின் தயாரிப்பில், உருவாகி கடந்த மே 2 தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் தண்டர் போல்ட்ஸ். இத்திரைப்படமானது, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியான ஹாலிவுட் திரைப்படமாகும். இந்த திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ஹாலிவுட் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட் ஆகவே அமையும்.