வார் மெஷின் (War Machine) - அதிரடி ஆக்ஷன் விருந்து..!!

War Machine
War Machine
Published on

வார் மெஷின் (War Machine) படத்தைப் பார்க்கலாம் என்று நினைத்ததற்கு முதல் காரணம் கதாநாயகன் ஆலன் ரிச்சன் (Alan Ritchson). அர்னால்ட் தம்பி போலக் கட்டு மஸ்தான உடல். உணர்ச்சியற்ற முகம். "இவன் இறங்கி அடித்தால் தாங்காது" என்று சொல்ல வைக்கும் தோற்றம் அவருக்கு.

ஆப்கானிஸ்தானில் காந்தகார் அருகே அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் தனது தம்பிக்கு உதவச் செல்கிறார் நாயகன் ஆலன். ராணுவத்தில் 'ராஸ்ப்' (RASP - Ranger Assessment and Selection Program) எனப்படும் உயரிய பிரிவில் சேர வேண்டும் என்பதே இருவரது லட்சியம். இதைப் பற்றிப் பேசிப் பிரியும் வேளையில், திடீரென நிகழும் தாக்குதலில் தம்பி காயமடைகிறார். அவரைச் சுமந்துகொண்டு முகாம் வரை ஓடுகிறார் ஆலன். ஆனால், வழியிலேயே தம்பி இறந்துவிடுகிறார்.

அது அவருக்கு வடுவாகப் பதிந்து விடுகிறது. தம்பியின் ஆசையை நிறைவேற்ற அந்த ராஸ்ப் முகாமுக்கு செல்கிறார் ஆலன், அங்கு அவர்களுக்கு வைக்கப்படும் கடைசி தேர்வில் கலந்து கொள்ள ஒரு குழு செல்கிறது. அப்போது எதிர்பாராவிதமாக அவர்கள் மிகப் பெரிய எதிரியை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் ? அவர்களிடமிருந்து தப்பினார்களா? ஆலன் 'ரேஞ்சர்' ஆனாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஆலன் ரிச்சன் உடம்புக்கு ஏற்ற பாத்திரம். படத்தில் அவருக்குப் பெயரே கிடையாது. 81 என்ற எண் மட்டுமே அவர் அடையாளம். உடன் வருபவர்களுக்கும் எண்கள் தான். யாருடனும் பழகாமல் ஒதுங்கி இருக்கும் அவரது கடந்த கால வாழ்க்கை தெரிய வருகிறது. அதற்குள் அந்தப் வார் மெஷினின் தாக்குதல் தொடங்கிவிடுகிறது. அதிலிருந்து எப்படி மீண்டு வருகின்றனர் என்பதைப் பரபர திரைக்கதையால் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாட்ரிக் ஹியூஸ்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ACCUSED - சைக்கலாஜிக்கல் டிராமா!
War Machine

அந்த வார் மெஷினிடம் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் பாடு அட்டகாசம். அழிக்க முடியாத ஓர் எதிரி. அதுவும் ஓர் இயந்திரம். எங்கிருந்து வந்தது என்பதற்கான அடையாளமும் தெரியாது. ஆனால் தப்பிக்க வேண்டும். அந்தச் சவாலை ஆலன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதில் கிளைமாக்ஸ் அதிர்கிறது.

ஒரு காட்டாற்றில் நடைபெறும் போராட்டம். மணற் சுரங்கத்தில் நடைபெறும் இறுதிப் போராட்டம் என ஆக்சன் காட்சிகளை அதகளப் படுத்தியிருக்கிறார்கள், தலை, கை கால்கள் துண்டித்து விழும் காட்சிகளெல்லாம் அபாரம். தன்னுடைய தம்பியைக் காப்பாற்ற முடியாத அவர் சக வீரரை அதே போலத் தூக்கி வந்து போட்டியிலும் வெல்கிறார். அதன் மூலம் அவர் தன்னுடைய மன உளைச்சலிலிருந்து விடுபடுகிறார்.

"சும்மா பார்ப்போமே" என்று ஆரம்பித்து, "பரவாயில்லையே!" என்று முழுப்படத்தையும் பார்த்து முடிக்க வைக்கும் ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் படம் தான் இந்த 'வார் மெஷின்'.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com