தமிழில் அறிமுகமானது ‘மைக்ரோ நாடகங்கள்’ - இனி ஸ்வைப் செஞ்சா சீரியல்!

ott
ottimage source:newsmeter
Updated on

தமிழ் சின்னத்திரை மற்றும் பொழுதுபோக்கு உலகில் முதல்முறையாக ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்காக ஸ்வைப் செய்து பார்க்கும் வகையில் மைக்ரோ நாடகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கான மைக்ரோ நாடகங்கள் என்பவை 1 முதல் 3 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய, செங்குத்தான(vertical) திரையில் ஸ்வைப் செய்து பார்க்கும் வகையிலான அதிநவீன குறுகிய தொடர்களாகும். இந்த பொழுதுபோக்கு முறை இந்தியாவில் குறிப்பாக தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் மிக வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. முழு திரைப்படத்தைப் போல விறுவிறுப்பான திருப்பங்களுடன், ஸ்மார்ட்போனில் பயணத்தின் பொழுது எளிதாகப் பார்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மைக்ரோ நாடகங்களின் நிலைப்பாடு(Micro-drama apps):

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரத்தியேக மைக்ரோ நாடக செயலிகள் அறிமுகமாகி உள்ளன. எடுத்துக்காட்டாக தமிழ் மொழிக்கான பிரத்தியேக "KadhaiShorts"செயலி, சுவாரசியமான குறு நாடகங்களை(Kutti Series) வழங்கி வருகிறது. 60 நொடிகளுக்குள் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் காதல், திகில், பழிவாங்குதல் மற்றும் சமூகக் கதைகள் போன்ற அதிரடி திருப்பங்களுடன் இவை உருவாக்கப்படுகின்றன.

தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்ப தலா 2 நிமிடங்கள் ஓடக்கூடிய 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் தொடர்களைக் கொண்டுள்ளது இந்த KadhaiShorts. இதன் தொடக்கக் கட்டணங்கள் வெறும் 20 ரூபாயிலிருந்து தொடங்குகின்றது.

Kuku TV என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு செயலியாகும். இது பிராந்திய குற்றவியல்(க்ரைம்) மற்றும் த்ரில்லர் கதைகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது. Kuku TV Google Play Store மூலம் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

அமேசான் MX Player (Fatafat) என்பதில் ஸ்வைப் செய்து பார்க்கும் வசதியுடன் கூடிய பல கட்டணமில்லா மைக்ரோ நாடகங்கள் கிடைக்கின்றன. இதனை Amazon MX Player தளத்தில் இலவசமாக பார்க்கலாம். 

தற்போது உலகம் முழுதும் மிகவும் ட்ரெண்டாக இருக்கும் சில முக்கிய மைக்ரோ நாடக செயலிகள் சில - Reel short, Drama box, Goodshort, ShortMax, Netshort போன்றவை.

இந்த நாடகங்கள் அனைத்தும் ஸ்மார்ட் போனில் முழுத்திரையில் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை டிக்-டாக்(TikTok) போன்ற சுருக்கமான வடிவத்தையும், நெட்பிளிக்ஸ் போன்ற தரமான கதைக்களத்தையும் ஒருசேரக் கொண்டுள்ளன. டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்கள் போல, அடுத்தடுத்த எபிசோட்களை மேலேயும் கீழேயும் ஸ்வைப் செய்து எளிதாக பார்க்கலாம். பெரும்பாலான செயலிகள் Pay-per-series (ஒவ்வொரு தொடருக்கும் கட்டணம்) அல்லது 'Coins'(நாணயங்கள்) முறையை பயன்படுத்துகின்றன. முதல் சில எபிசோடுகள் இலவசமாகவும், அடுத்தடுத்த எபிசோட்களை அன்லாக் செய்ய சிறிய தொகையும் வசூலிக்கப்படுகிறது. 

குறுகிய கால அவகாசத்தில் முழுமையான பொழுதுபோக்கினைத் தரும் இந்த மைக்ரோ நாடகங்கள், தற்போதைய நவீன ஸ்மார்ட்போன் பயனர்களின் முதல் தேர்வாக மாறியுள்ளன.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: பெத்தி (2026) - தெலுங்கு - ஸ்போர்ட்ஸ் ஆக்சன் ட்ராமா!
ott

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com