

பெத்தி என்பது நாயகனின் பெயர். பலரும் பட டைட்டிலை பெட்டி என்று தவறாக உச்சரிக்கிறார்கள். டைட்டிலில் Bedhi என வந்திருக்க வேண்டும். ஏ.ஆர் ரஹ்மான் இசையால் இந்தப் படம் அகில இந்திய அளவில் கவனம் பெறுகிறது.
அந்நியன் படத்தில் விக்ரம் 3 வித கெட்டப்களில் வந்த மாதிரி இதில் ராம் சரண் 3 விதமான உடல் அமைப்புடன் வருவது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு. அவரது உழைப்பு வின் (WIN) ஆனதா? வீண் ஆனதா? பார்ப்போம்.
2021ம் ஆண்டில் உப்பேண்ணா என்ற ஹிட் படத்தைக் கொடுத்த புஜ்ஜி பாபு சனாவின் அடுத்த படம் தான் இது. தன் முதல் படத்துக்காக நேஷனல்பிலிம் அவார்ட், சிமா அவார்ட், சாக்சி எக்சலன்ஸ் அவார்ட் வென்றவர்.
ஸ்பாய்லர் அலெர்ட்
கதை நடக்கும் கால கட்டம் 2016. கதைக்களம் ஆந்திராவில் விஜயநகரம் என்னும் (கற்பனை) கிராமம்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒலிம்பிக்கில் 2 தங்கப்பதக்கங்கள் மட்டுமே வாங்கியதால் கடுப்பான விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு மீட்டிங் போட்டு திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்கிறார்.
அமைச்சர் அறிவுறுத்தலின்படி விளையாட்டு வீரனைத் தேடிப் போகும்போது நாயகனைப் பற்றி ஆச்சரியமான உண்மைகள் தெரிகிறது.
மல்யுத்தம், ஓட்டம், கிரிக்கெட் ஆகிய மூன்றிலுமே சாம்பியன் ஆக இருக்கிறார் நாயகன். ஆனால் அவர் குடி இருக்கும் கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. ரயில் நிற்பதில்லை. ரயில்வே டிராக் ஊரில் இருந்தும் பயன் இல்லை. அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. தனக்கும், தன் சொந்த ஊருக்கும் ஒரு அடையாளத்தை உருவாக்க நாயகன் நினைக்கிறார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த ஊடகம் தான் விளையாட்டுத் துறை.
மூன்று துறைகளில் ஜாம்பவானாக இருக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்குப்பின் நாயகன் என்ன செய்தார்? என்பது மீதித் திரைக்கதை.
நாயகனாக ராம் சரண் அற்புதமான அர்ப்பணிப்பு, உழைப்பு கலந்த பங்ககிப்பு அருமை. குறிப்பாக குஸ்தி சண்டைக் காட்சிகளில் கலக்கி இருக்கிறார். ரன்னிங் மேனாக ஒரு வித உடல் அமைப்பு, குஸ்தி பயில்வானாக வேறு வித உடல் அமைப்பு, கிரிக்கெட் வீரராக புது வித உடல் அமைப்பு என அவர் காட்டி இருக்கும் வித்தியாசம் அபாரம்.
நாயகி ஆக ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர். இவரது கேரக்டர் டிசைன் சரி இல்லை. நடிக்க வாய்ப்பும் இல்லை. கவர்ச்சிக்காக மட்டுமே ஊறுகாய் போல பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதி ஏற்று நடித்த ரோல் சிவராஜ் குமார் ரோல். குஸ்தி வாத்தியாராக கலக்கி விட்டார்.
பொமன் இராணி, திவ்யேந்து சர்மா, ஜகபதிபாபு, ஜான் விஜய், அஜய் கோஸ், ஹரீஸ் பெரோடி, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என மற்ற அனைவரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்திருக்கிறார்கள்.
ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் நான்கு பாடல்களும் அருமை. குறிப்பாக சிக்கிரி சிக்கிரி மெகா ஹிட். தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி கமர்ஷியல் மசாலா பாணியில் இசை அமைத்து இருக்கிறார். பின்னணி இசையும் நன்று.
ஒளிப்பதிவு ஆர் ரத்தினவேலு. குஸ்தி சண்டைக்காட்சியில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள்.
நவீன நூலியின் எடிட்டிங்கில் படம் 189 நிமிடங்கள் ஓடுகிறது. ரொம்பவே நீளம். ஷார்ப் ஆக 150 நிமிடங்களில் முடித்திருக்கலாம்.
ஐந்து நபர்களின் உதவியுடன் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் புச்சி பாபு சனா.
சபாஷ் டைரக்டர்
ஆக்சன் சீக்வன்ஸ் அனைத்தும் அதகளம்.
நாயகனின் அர்ப்பணிப்பும், உழைப்பும் அபாரம். கமல், விக்ரம், சூர்யா இவர்களைத் தாண்டிய உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
ஜெகபதி பாபுவின் கேரக்டர் டிசைன் நடிப்பு அற்புதம். இதுவரை இப்படி ஒரு கேரக்டர் அவருக்குக் கிடைத்ததே இல்லை.
ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஹிட்.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
கதை, திரைக்கதை இரண்டுமே ஒரு சரியான பாதையில் பயணிக்காமல் தறிகெட்டு ஓடுகிறது.
நாயகியின் கேரக்டர் டிசைன் மகா மட்டம். படம் முழுக்க அவருடன் எப்போதும் 10 தோழிகள் வருகிறார்கள். அனைவரும் தாவணி அணிந்து கண்ணியமாய்த் தோன்றும்போது நாயகி மட்டும் தாவணி அணியாமல் வருகிறார். நாயகன் நாயகிக்கு தாலி கட்டவில்லை, நாயகி தனக்குத்தானே தாலி கட்டிக்கொள்கிறார், ஆனால் தாவணி கட்டவில்லை.
நாயகனின் கேரக்டர் டிசைனும் சரி இல்லை. நாயகியிடம் காதலை சொல்லும்போது, சில பேர் காதலை பூக்கள் கொடுத்து சொல்வார்கள், சில பேர் காதலை பரிசு தந்து சொல்வார்கள். ஆனால் நாயகன் செய்தது போலீசை கூப்பிடும் அளவு உள்ளது.
படம் ரொம்பவே நீளம். எமோஷனல் கனெக்ட்டே இல்லை. எப்பத்தான் படத்தை முடிப்பாங்க என சலிக்க வைக்கும் திரைக்கதை அமைப்பு.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - சொல்ல வந்த கதைக்கரு, மெசேஜ் எல்லாம் அருமை, ஆனால் சொன்ன விதம் சரியில்லை. திரைக்கதை சலிப்பை ஏற்படுத்துகிறது. ராம்சரண், ஏ.ஆர் ரஹ்மான் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்.