ஜாக்குலினை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்… கோபமடைந்த சுனிதா!

BB 8 Update
BB 8 Update
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் தொடக்கமே விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. ஜாக்குலின் மற்றும் சுனிதா இடையே நடக்கும் காரசாரமான பேச்சுவார்த்தையே இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

பிகபாஸில் கடந்த 7 சீசன் கமலஹாசனால் தொகுக்கப்பட்டு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்றது. இதனையடுத்து விஜய் சேதுபதி தொகுக்கும் இந்த சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. அந்த அத்தனை சந்தேகங்களையும் விஜய் சேதுபதி முதல் நாளே உடைத்துவிட்டார். இந்த சீசன் 8ல் தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின், ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இருவீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டி நடைபெறும் என்றே சொல்லப்படுகிறது.

அந்தவகையில் இதில் 24 மணி நேரத்திற்குள் ஒரு எவிக்ஸன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டியாளர்கள் பலர் சாச்சனாவை நாமினேட் செய்தார்கள். இதனால் அவர் ஒரு நாளுக்குள்ளையே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு டாஸ்க் அறிவிக்கப்படுகிறது. அதாவது பெண்கள் வீட்டிலிருந்து ஒருவர் ஆண்கள் வீட்டிற்கும், ஆண்கள் வீட்டிலிருந்து ஒருவர் பெண்கள் வீட்டிற்கும் சென்று விளையாட வேண்டும். அந்தவகையில் ஆண்கள் வீட்டில் உள்ளவர்கள், பெண்கள் வீட்டினர் ஜாக்குலினைதான் அனுப்புவார்கள் என்று கணிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை All India Radio-வில் அறிவித்த தமிழ் நடிகர் இவர்தான்!
BB 8 Update

ஆனால், இங்கு அப்படியே நேர்மாறாக நடக்கிறது. ஜாக்குலின் என்னை எப்படியும் அனுப்பமாட்டீங்க, பெட்ல படுக்க சொல்வீங்க என்கிறார். அதற்கு சுனிதா இப்போ அதலாம் பிரச்சனை இல்லை. நீங்க அங்கப் போறது பிரச்சனையாகிடும். இந்த டீமுக்கு நீங்கப் போறது நல்லது கிடையாது என்று பேசுகிறார்.

எப்போதும் சுனிதா ஜாலியாக பேசுபவர், அவருடைய இந்த கோபமான முகம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com