நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Nilavukku en mel ennadi kobam
Nilavukku en mel ennadi kobam
Published on

தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருபவர் தனுஷ். பா.பாண்டி படத்தின்மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். முதல் படமே பெரிய ஃபீல் குட் படத்தை கொடுத்தார். இதனால், அடுத்து இயக்கிய ராயன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பைத் தாங்கி நின்றது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை.

அதேபோல், தனுஷ் பாலிவுட் ஹாலிவுட் வரை கலக்கி வரும் ஒரு கோலிவுட் நடிகர் என்பதையும் நாம் கூறியே ஆக வேண்டும். பாலிவுட்டில் இன்றுவரை பேசப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற படம்தான் ராஞ்சனா. தனுஷ் எத்தனை படங்கள் கோலிவுட்டில் வெற்றி கொடுத்தாலும். பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்த ஒரு படம்தான் ராஞ்சனா. இப்படம் விரைவில் ரீரிலீஸாகவுள்ளது.

இவர் சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கினார். இப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  தனது அக்கா மகன் பவிஷ் என்பவரை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தார் தனுஷ். அவருடன் பிரபல இளம் மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், நடிகைகள் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் என இளம் நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் பிப்ரவரி 21ம் தேதிதான் திரையரங்குகளில் ரீரிலீஸானது. இப்படத்துடன் பிரதீப் ரங்கநாதன் நடித்த ட்ராகன் படமும் ரிலீஸானது. ஆகையால், நினைத்த அளவு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வசூலிக்கவில்லை. இப்படம் வெறும் 8 கோடி மட்டுமே வசூல் செய்தது. இந்த நிலையில் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் மார்ச் 21 முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: டப்பா கார்ட்டல் - மகளிர் தாதாக்கள் குழுவின் போதையாட்டம்!
Nilavukku en mel ennadi kobam

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com