இந்த வாரம் ஓடிடி-ல் வெளியாகும் பராசக்தி முதலான படங்கள் மற்றும் மனதை இதமாக்கும் நிவின் பாலியின் காதல் திரைப்படங்கள்..!

ott release
ott releasesource:financialexpress
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

1. பராசக்தி - ZEE5

சிவகார்த்திகேயன், ரவி மோகன் , அதர்வா முரளி, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் , சுதா கொங்குரா இயக்கத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் பராசக்தி. தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மையக்கருவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது . பொங்கல் வெளியிடாக திரைக்கு வந்து இந்த திரைப்படம் , பிப்ரவரி 07 ஆம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.


2.தி ராஜா சாப் – ஜியோ ஹாட்ஸ்டார்

பிரபாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த  திகில் , அமானுஷ்யம் , நகைச்சுவை , காதல் கலந்த திரைப்படம் இது.  ஒரு பேய் மாளிகைக்கு செல்லும் பாட்டி , பேரன் , பேரனின் தோழிகள் ஆகியோர் சந்திக்கும் திகில் கலந்த நகைச்சுவை நிகழ்வுகள் தான் படத்தின் திரைக்கதை. இந்த திரைப்படத்தில் பிரபாஸ் உடன் சஞ்சய் தத் , செரினா வஹாப் , பூமன் இராணி , மாளவிகா மோகனன்,  நிதி அகர்வால் , அம்மு அபிராமி , விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார்  ₹160 கோடிக்கு வாங்கி இருந்தது. 

பிப்ரவரி 06 ஆம் தேதி முதல் தமிழ் ,தெலுங்கு , ஹிந்தி ,கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம்.

3.நீலகண்டா – சன் NXT 

மாஸ்டர் மகேந்திரனின் நடித்த தெலுங்கு மொழி திரைப்படம் இது. சிறுவயதில் செய்த தவறுக்காக கிராமத்தில் வசிக்கும் நீலகண்டாவிற்கு , கிராமத்தை விட்டு 15 ஆண்டுகள் வெளியேறவே கூடாது என்ற விசித்திரமான தண்டனை வழங்கப்படுகிறது. அதன் பின்னர் நடைபெறும் நடைபெறும் கதை தான் திரைப்படம். இந்த திரைப்படத்தில் மகேந்திரனுடன் ராம்கி , யஷ்னா , சினேகா உல்லாள் ஆகியோரும் நடித்துள்ளனர். நீலகண்டா திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிப்ரவரி 6, 2026 முதல் சன் NXT OTT தளத்தில் பார்க்கலாம்.

மனதை இதமாக்கும் நிவின் பாலியின் காதல் திரைப்படங்கள்: 

1. பிரேமம் - ஜியோ ஹாட்ஸ்டார் ,அமேசான் பிரைம் 

நிவின் பாலி , சாய் பல்லவி , மடோனா செபாஸ்டியன் , அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்த காதல் நகைச்சுவை திரைப்படம் பிரேமம். படத்தின் கதாநாயகனான ஜார்ஜ் தனது பள்ளிப்பருவத்தில் இருந்து இருமுறை காதலில் தோற்பதும், இறுதியில் மீண்டும் காதல்வயப்படுவதும் தான் திரைக்கதை. படத்தில் மேரி மீதான ஜார்ஜின் நகைச்சுவை காதலும் , கவிதை போன்று மலர் டீச்சர் மீதான காதலும் , பக்குவம் நிறைந்த பின்னர் வரும் செலின் மீதான காதலும் நிச்சயம் உங்களை ரசிக்க வைக்கும். ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஆகிய தளங்களில் மலையாள மொழியில் காணக் கிடைக்கிறது. 

2. ஓம் சாந்தி ஓஷானா - ஜியோ ஹாட்ஸ்டார்

நிவின் பாலி , நஸ்ரியா , வினித் சீனிவாசன் ஆகியோர் நடித்த நகைச்சுவை நிறைந்த காதல் திரைப்படம் தான் ஓ சாந்தி ஓஷானா . டாக்டராக பணிபுரியும் விளையாட்டுப் பெண்ணான பூஜாவும் அதே ஊரை சேர்ந்த கிரிக்கும் இடையில் நடைபெறும் பல்வேறு காதல்களும் அதற்குள் நடைபெறும் சிக்கல்களும் , இறுதியில் அந்த கதை எவ்வாறு முடிந்தது என்ற ஆர்வத்தை தூண்டும் திரைப்படம். 2014 ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் அது. இந்த திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் , அமேசான் பிரைம் , மனோரமா மேக்ஸ் ஆகிய ஒடிடி தளங்களில் காணக் கிடைக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com