

2026ம் ஆண்டு தொடங்கி 10 வாரங்கள் ஆன நிலையில் ஒரு நாளும் இல்லாத திருநாளாக இந்த வாரம் மட்டும் அதாவது மார்ச் 13 ல் மட்டும் மொத்தம் 23 தமிழ்ப்படங்கள் ,தமிழ் டப்பிங் படங்கள் வெளியாக இருக்கின்றன.எதைப்பார்ப்பது?எதை விடுவது?எதை வெயிட்டிங்க் லிஸ்ட்டில் வைப்பது ? என்று ரசிகர்கள் திண்டாடப்போகிறார்கள்.நெட்பிளிக்ஸ் முதல் டெண்ட் கொட்டாய் வரை அனைத்துத் தளங்களும் வரிசை கட்டி நிற்கின்றன.
நெட்பிளிக்ஸ்: 7 படங்கள்
அமேசான் பிரைம்: 4 படங்கள்
யூடியூப்: 4 படங்கள்
ஜீ 5: 2 படங்கள்
ஜியோ ஹாட்ஸ்டார்: 2 படங்கள்
லயன்ஸ் கேட் பிளே: 2 படங்கள்
ஆஹா தமிழ்: 1 படம்
டெண்ட் கொட்டாய்: 1 படம்
1. நெட்பிளிக்ஸ் (7 படங்கள்)
மேட் இன் கொரியா (Made in Korea):
பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான நேரடித் தமிழ்ப் படம்.
இது ஒரு ரொமாண்டிக் மூவி.டைட்டிலில் கொரியா இருந்தாலும் இது ஒரு தமிழ்ப்படமே.12/3/2026 முதல் நேரடியாக நெட் பிளிக்சில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் இது.தமிழ் நாட்டில் ஒரு கிராமத்தில் இருக்கும் நாயகி சியோல்,சவுத் கொரியா பயணப்பட்டு அந்த நாட்டுக்கலாச்சாரத்தை உணர்ந்து தன்னை மேன்படுத்திக்கொள்ள முயலும் ஒரு பெண்ணின் கதை.கூடவே ஒரு காதல் கதையும் உண்டு.நாயகி ஆக பிரியங்கா மோகன் நடிக்க ரா.கார்த்திக் இயக்கி இருக்கும் படம் இது
2.பெண்ணும் போரட்டும் (Pennum Porattum):(மலையாளம்/தமிழ்)
இயக்குநர் ராஜேஷ் மாதவன் இயக்கத்தில் வந்திருக்கும் காமெடி டிராமா இது.ரெய்னா ராதா கிருஷ்ணன் ,ராஜேஷ் மாதவன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தில் ஒரு கிராமத்தில் நடக்கும் இரு நிகழ்வுகளை வைத்துக்கதை சொல்லி இருக்கிறார்கள்.
நாயகி சொன்னதாக ஒரு வதந்தி ஊரில் பரவுகிறது.ஒரு நாய்க்கு ரேபிஸ் நோய் இருப்பதாகப்புரளி பரவுகிறது.இந்த இரண்டு வதந்திகளால் கிராமமே எப்படி அல்லோலப்படுகிறது என்பதை காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்.
3.பங்கி (Funky):
13/2/2026 அன்று தெலுங்கில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற படம் இது.கயாடு லோஹர் நாயகி ஆக நடித்த ரொமாண்டிக் டிராமா இது.பிரமாதமான ஒளிப்பதிவில் இவரைக்காணக்கண் கோடி வேண்டும்.இதில் 4 சூப்பர் ஹிட் பாட்டுக்கள் இருக்கின்றன.நான் லீனியர் கட்டில் செல்லும் திரைக்கதை வடிவ அமைப்பு மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படம் போல் இளமைத்துள்ளல் நிறைந்த கதை இது.
4.டைனஸ்டி - தி மர்டோக்ஸ் (Dynasty: The Murdochs): அமெரிக்கன் மூவி/தமிழ்
டாக்குமெண்ட்ரி டிராமா :இது ஒரு சுய முன்னேற்ற மோட்டிவேஷனல் டிராமா.நம்ம ஊர் டாட்டா ,பிர்லா போல அங்கே வாழும் ஒரு பிரபல தொழில் அதிபரின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை தான் கதை.
5.இன்சைடு தி மேனோஸ்பியர் (Inside The Manosphere): டாக்குமெண்ட் ரி வெப் சீரிஸ் 18+
வளர்ந்து வருகின்ற ஒரு அல்ட்ரா மாடர்ன் கம்பெனி ஒன்றின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி பற்றிய டாக்குமெண்ட் ரி வெப் சீரிஸ் இது.இதில் அடல்ட் கண்ட்டெண்ட் இல்லை என்றாலும் மோசமான வார்த்தை பிரயோகங்கள் இருப்பதால் ஏ சர்ட்டிபிகேட் பெற்றுள்ளது.
6.ஒன் பீஸ் சீசன் 2 (One Piece Season 2):
உலகப் புகழ்பெற்ற அட்வென்ச்சர் தொடரின் இரண்டாம் பாகம். இதன் முதல் பாகம் 2023-ல் வெளியாகி மெகா ஹிட் ஆனது. விஷூவல் எபக்ட்சுக்காக பெரிதும் பேசப்பட்டது. அனிமேஷனில் இது போல் ஒரு லைவ் ஆக்சன் மூவி வந்ததில்லை என மீடியாக்கள் புகழ்ந்து தள்ளின.16 எபிசோடுகள் கொண்ட விஷுவல் ட்ரீட்.
7.தட் நைட் (That Night):ஆங்கிலம் /தமிழ் - க்ரைம் திரில்லர் 18+
நாயகி சிங்கிள் மதர் ஆக இருக்கிறார்.ஒரு தீவில் நடந்த கொலைக்கேசில் மாட்டிக்கொள்கிறார்.அவருக்கும் அந்தக்கொலைக்கும் சம்பந்தம் இல்லை.ஆனால் போலீசில் மாட்டுகிறார்.நாயகியின் சகோதரிகள் அவரைக்காப்பாற்ற வருகின்றனர்.உதவி செய்யலைன்னாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப அவர்கள் நல்லது செய்ய நினைத்தாலும் அது நாயகிக்குக்கெடுதலாகவே முடிகிறது.இந்தக்கேசில் இருந்து நாயகி மீண்டாரா?என்பது மீதிக்கதை.
க்ளாரா கல்லே ,பாலா உசேரோ,கிளாடியா சலாஸ் ஆகியோர் நடிக்க ஜேசன் ஜார்ஜ் இயக்கிய படம் இது..திரை அரங்கு களில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக நெட் பிளிக்சில் ரிலீஸ் ஆகும் படம் இது
2. அமேசான் பிரைம் (4 படங்கள்)
8.லாக்டவுன் (Lockdown):
அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான மெலோ டிராமா.இது 23/11/2025-ல் திரைப்பட விழாவில் கோவாவில் திரையிடப்பட்ட படம்.30/1/2026 முதல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் .ஏ.ஆர்.ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகி ஆகவும் நிரோஷா,லிவிங்க்ஸ்டன், சார்லி ,பிரியா வெங்கட் மற்றும் பலர் நடித்த வித்தியாசமான படம்.
நாயகி ஒரு பார்ட்டியில் சரக்கு அடித்து மட்டை ஆக யாரோ அவரை பாலியல் வன்புணர்வு செய்து விடுகிறார்கள்.நாயகி கர்ப்பம் ஆகிறார்.கர்ப்பத்தைக்கலைக்க நினைக்கையில் லாக்டவுன் தொடங்கி விடுகிறது .கொரோனா கால கட்டத்தில் நாயகி இந்தப்பிரச்சனையை எப்படி எதிர் கொண்டார் என்பது மீதிக்கதை.
9.ஸ்கார்பேட்டா (Scarpetta):
நிக்கோல் கிட்மேன் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ். நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.மொத்தம் 8 எபிசோடுகள்.
யாராலும் தீர்க்க முடியாத க்ரைம் கேஸ்களை லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலம் எப்படி தீர்க்கிறார்கள் என்பதை காட்டும் டாக்குமெண்ட்ரி இது.பிரபல ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் நாயகியாக நடித்த தொடர் இது.
10.லோக்கல் டைம்ஸ் (Local Times):
நான்கு நண்பர்கள் சேர்ந்து எந்தக்கொள்கையும் ,லட்சியமும் இல்லாத நின்று போன ஒரு பத்திரிக்கையை டேக் ஓவர் பண்ணி எப்படி நடத்துகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லும் தொடர் இது .இதில் ஆர்.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரிஷிகாந்த், அத்விதா ஆறுமுகம், நந்திதா ஸ்ரீ குமார் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.ஒரு பத்திரிகையை நண்பர்கள் நடத்தும் கதை.
11.அஸ்பிரண்ட்ஸ் (Aspirants):
மூன்று நண்பர்கள் யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு எப்படி ரெடி ஆகிறார்கள்? எப்படி தேர்வு எழுதுகிறார்கள் என்பதைக காமெடி ஆக சொல்லும் கதை இது.அபூர்வ் சிங்க் கார்கி இயக்கி இருக்கிறார்
3.யூடியூப் (4 படங்கள்)
12. The Ninth Passenger : ஆங்கிலம் /தமிழ்
ஹாரர் திரில்லர் டிராமா: ஒரு உல்லாசப்படகில் ஒரு குழு கடலில் பயணிக்கிறது.அவர்கள் சந்திக்கும் அமானுஷயங்கள் தான் மொத்தக கதையுமே. இது 2018-ல் ரிலீஸ் ஆன அமெரிக்கன் மூவி. இப்போது தமிழ் டப்பிங் கில் வெளியாகி இருக்கிறது.
13.கேப்டன் ஹூக் - தி கர்ஸ்டு டைட்ஸ் (Captain Hook: The Cursed Tides):ஆங்கிலம்/தமிழ்
நாயகன் தன் தங்கையை கொன்றவனை பழிவாங்க கிளம்புகிறான்.அவனை ஒரு கேங்கஸ்டர் க்ரூப் பின் தொடர்கிறது.இரு தரப்புக்குமான மோதல் தான் மொத்தக்கதையே.இது 2025ல் வெளியான ஹாலிவுட் படத்தின் தமிழ் டப் வெர்சன்.
14.அபோகாலிப்ஸ் ஆஃப் ஐஸ் (Apocalypse of Ice):ஆங்கிலம்/தமிழ்
திடீரென ஒரு நாள் உலகம் முழுக்க ஐஸ் ஆக உறையத்தொடங்குகிறது.நாயகி உயிர் தப்பிக்க வேண்டும் எனில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு பயணம் செய்ய வேண்டும்.அந்தப்பயணத்தில் நாயகிக்கு நிகழும் சம்பவங்கள் தான் மொத்தப்படமும்.உலகம் ஐஸாக உறைந்து போகும் சூழலில் ஒரு பெண் தப்பிக்கும் சாகசப் பயணம்.
டனியா பாக்ஸ் ,லிண்டா லோபஸ் ,எமிலி கில்லியன் ஆகியோர் நடித்த படம் இது.
15.அல்லி (Alli):சைக்காலஜிக்கல் க்ரைம் டிராமா
இது 2019ல் மலையாளத்தில் வெளியான Chola படத்தின் தமிழ் டப் வெர்சன்.
நாயகன், நாயகி இருவரும் காதலர்கள். நாயகன் டிரைவர் ஆக வேலை பார்க்கும் ஜீப் ஓனர் தான் வில்லன்.ஒரு சந்தர்ப்பத்தில் நாயகன்,நாயகி,வில்லன் மூவரும் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் நிகழ்கிறது.இந்த பயணத்தில் நாயகன் வில்லன் ஆகவும் ,வில்லன் நாயகன் ஆகவும் மாறுகிறார்கள்.நாயகி என்ன முடிவு எடுத்தார் என்பது தான் கதை.
ஜோஜூ ஜார்ஜின் பிரமாதமான நடிப்பு பேசப்பட்டது.நிமிசா சஞ்சயன் த கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் எந்த அளவு பேசப்பட்டாரோ அதை விட டபுள் மடஙகு புகழை இதில் பெற்றார்.
4. ஜீ 5 (2 படங்கள்)
16. Bhartha Mahasayulaku Wignyapthi பர்த மஹாசாயுலகு விக்யாப்தி(கணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்) :தெலுங்கு/தமிழ்
கிஷோர் திருமலாவின் இயக்கத்தில் ரவிதேஜா,ஆஷிகா ரங்கநாத்,டிம்ப்பிள் ஹயாதி ஆகியோர் நடித்த காமெடி படம் இது.13/1/2026-ல் வெளியான இந்தப்படம் இப்போது தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.
ஒரு நாயகன் இரு நாயகி என்றால் என்ன கதை ஆக இருக்கும் என எல்லோருக்கும் தெரியும்.இதில் இரு நாயகிகளின் கிளாமர்,நாயகன்படும் அவஸ்தைகள் செம காமெடியாக இருக்கும்.
17.பூக்கி - தமிழ் ரொமாண்டிக் டிராமா :
விஜய் ஆண்டணியின் சொந்தப்படம் என்பதாலும் டைட்டில் வித்தியாசமாக இருந்ததாலும் ரிலீசுக்கு முன் பேசப்பட்ட இந்தப்படம் கமர்சியல் ஹிட் ஆகவில்லை.
நாயகன் ,நாயகி இருவரும் காதலர்கள்.கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிகிறார்கள்.இருவருக்கும் இன்னொரு காதல் அனுபவம் கிடைக்கிறது.ஆனால் இருவரும் பழைய காதலை மறக்க முடியாமல் தவிக்கிறார்கள்.என்ன முடிவு எடுத்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
அஜய் தீஷன்,தனுசா, ஷியரா,சுனில்,லட்சுமி மஞ்சு, ஆர்.பாண்டியராஜன் நடித்த படம் இது.இயக்கம் கணேஷ் சந்திரா
5. ஜியோ ஹாட்ஸ்டார் (2 படங்கள்)
ரிசார்ட் (Resort):
எருமை சாணி சேனல் என்ற புகழ் பெற்ற காமெடி சேனல் நடத்தி வரும் விஜய் குமார் ராஜேந்திரன் நாயகன் ஆக நடிக்கும் புதிய தமிழ் வெப் சீரிஸ் இது.கீர்த்தி அமர் ,அபிநயா நேத்ரன்,தர்சனா பால் ,சாய் தன்யா,படவா கோபி ஆகியோர் முக்கியக்கதாபாத்திரஙகளில் நடிக்க தலைவாசல் விஜய் வில்லனாக நடித்திருக்கிறார்.
நாயகன் 12 வதில் பெயில் ஆனவன்.ஒரு சொகுசு விடுதியில் ஹவுஸ் கீப்பிங்க் ஊழியர் ஆகப்பணி புரிகிறார்.தலை சிறந்த செப் (சமையல் கலைஞன்) ஆக வேண்டும் என்பதே இவர் லட்சியம்.இவர் தன் லட்சியத்தை அடைந்தாரா?என்பதை காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்.
19.ஜூடோபியா பாகம் 2 (Zootopia 2):
வால்ட் டிஸ்னியின் புகழ் பெற்ற அனிமேஷன் படம் இது.முதல் பாகம் ஆல்ரெடி ரிலீசாகி மெகா ஹிட் ஆனது. இப்போது இரண்டாம் பாகம்.இது இன்வெஸ்டிகேசன் க்ரைம் திரில்லர் பாணியில் அமைந்த திரைக்கதை.
ஜூடி ஹாப்ஸ் ,நிக் வைல்ட் இருவரும் இணைந்து மர்மமான ஒரு உயிரினத்தை பற்றி விசாரித்து துப்பறிவது போல் திரைக்கதை காமெடியாக செல்லும்.குழந்தைகள் கண்டு களிக்கக்கூடிய காமெடி டிராமா இது
6. லயன்ஸ் கேட் பிளே (2 படங்கள்) :
20.தி தாஜ் ஸ்டோரி (The Taj Story): Hindi/Tamil
31/10/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது தமிழ் டப்பிஙகில் லயன்ஸ் கேட் பிளே ஓடிடி- யில் வெளியாகிறது.
ஜாகிர் உசைன்,அம்ருதா,ஸ்னேகா வாஹ் நடிப்பில் துஷ் சர் அம்ரிஷ கோயட் இயக்கிய படம் இது.இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வி அடைந்த படம்.3 மணி நேரம் ஓடும் இந்தப்படம் நம் பொறுமையை சோதிக்கிறது.நம்ப முடியாத திரைக்கதை என பாலிவுட் பத்திரிக்கைகள் விமர்சனம் எழுதினர்.
21.டர்புலன்ஸ் (Turbulence):ஆக்சன் திரில்லர்
ராட்சச பலூனில் ஒரு தம்பதி பறந்து செல்ல ஒரு ட்ரிப் பிளான் செய்கிறார்கள்.ஏற்கனவே விரிசல் அடைந்த தங்கள் உறவு இதன் மூலம் சரி ஆகும் என நினைக்கிறார்கள்.ஆனால் இவர்களுடன் மூன்றாவதாக ஒரு நபர் இணைய இவர்கள் உறவில் விரிசல் மேலும் பலம் அடைகிறது.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை
ஹேரா ஹில்மர் ,ஜெரேமி இர்வின் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க கிளாடியோ பா இயக்கிய படம் இது.
7. இதர தளங்கள்
22.கருப்பு பல்சர் (Karuppu Pulsar) - டெண்ட் கொட்டாய்:
நாயகன் அட்டக்கத்தி தினேஷ் இரு வேடங்களில் நடிக்க ரேஷ்மா வெங்கடேஷ் ,சரவணன் சுப்பையா மதுனிகா,மன்சூர் அலிகான் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க எஸ் முரளி கிரிஷ் இயக்கத்தில் 30/1/2026-ல் வெளியான இந்தப்படம் வித்தியாசமான ஹாரர் திரில்லர் தான்.ஆனால் திரைக்கதை சரி இல்லாததால் ஹிட் ஆகவில்லை.
ஒரு கருப்பு பல்சர்.அதில் தனியாக யாராவது சென்றால் பிரச்சினை இல்லை,ஆனால் ஜோடியாக சென்றால் விபத்து நிகழ்கிறது.காரணம் அதில் ஒரு ஆவி இருக்கிறது.அதன் பிளாஸ்பேக் என்ன? பிரச்சனைக்குத்தீர்வு என்ன என்பதை மீதிக்கதையில் சொல்லி இருக்கிறார்கள்.
23.யோகிடா (Yogida) - ஆஹா தமிழ்:
சாய் தன்சிகா நடித்த இந்தப்படம் ஒரு ஆக்சன் ரிவஞ்ச மூவி.
நாயகி வைஜெயந்தி ஐ.பி.எஸ், விஜயசாந்தி மாதிரி நேர்மையான போலீஸ் ஆபீசர்.வில்லன் ஒரு தாதா.இருவருக்கும் அடிக்கடி மோதல் நிகழ ஒரு முறை வில்லன் நாயகியைப்பாலியல் வன் கொடுமை செய்து விடுகிறார்.இதற்குப்பின் நாயகி என்ன செய்தார் என்பதுதான் கதை.
பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி தாதாவைப் பழிவாங்கும் கதை.