அரசியை ஊர் வேண்டுமென்றே வம்பிழுக்கும் விதமாக பேசியதைத் தொடர்ந்து பாண்டியன் ஒரு காரியம் செய்கிறார். அதை எதிர்த்து செந்தில், கதிர், பழனி ஆகியோர் கோபமாக பேசுகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 தொடர் அண்ணன் தம்பிகள் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீரியல் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஆரம்பமானது. இது அப்பா மகன்களின் கதையாக இருந்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் பல விறுவிறுப்பான கதைகளங்கள் நகர்ந்தன. அதாவது, செந்தில் பாண்டியனுக்கு தெரியாமல் 10 லட்ச ரூபாயை எடுத்து, மீனாவின் அப்பாவிடம் கொடுத்து அரசு வேலை வாங்கினார். இந்த உண்மை பாண்டியன் வீட்டுக்கு தெரிந்து பெரும் பிரச்சனை ஆனது. இது முடியும் நேரத்தில், அரசி குறித்தான விஷயங்கள் வெளியே வந்தது. அதாவது, அரசி தனக்கு தானே தாலி கட்டிக்கொண்ட விஷயம் வெளியே தெரிய வந்தது. மேலும் அரசி குமரவேலுவை பழி வாங்கதான் இதை செய்தார் என்று இரண்டு குடும்பங்களுக்கும் தெரிந்து, பாண்டியன் அரசியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இதனையடுத்து ஊரில் பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். அதாவது 'எந்த பொண்ணாவது தனக்கு தானே தாலிக்கட்டிக்கொண்டு இப்படி செய்வாளா?' என்று அரசி முன்பே கேட்கிறார்கள். வீட்டுக்கு வந்த பாண்டியனுக்கு ஊரில் அனைவரும் அரசி குறித்து இப்படி பேசுவது தெரிய வருகிறது.
உடனே அவர் ஒரு ஆட்டோ மற்றும் ஸ்பீக்கர் எடுத்துக்கொண்டு 'என்னுடைய மகள் பற்றி யாரும் பேச வேண்டாம்' என்று ஊர் முழுக்க ஸ்பீக்கரில் பேசுகிறார். இதனால், நியூஸில் கூட அவர்பற்றிய செய்தி வந்தது. அப்பா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணம் பாண்டியன் என்று பேசப்படுகிறார்.
இது அரசிக்கு மிகவும் பிடித்தது என்றாலும், பழனி, கதிர் செந்தில் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. 'கொஞ்சம் ஓவராக இருக்கிறது, இப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியமென்ன?' என்பதுபோல் பேசுகின்றனர்.
பாண்டியன் அரசிக்கு பிடித்தால் போதும், வேறு யார் பற்றியும் கவலை இல்லை என்று சென்றுவிடுகிறார். பின் செந்தில் தனது வேலை குறித்து ஆஹோ, ஓஹோ என்று பேசிக்கொண்டிருக்கிறார்.
பின் ரூமில் ராஜி கதிரிடம், பாண்டியன் குறித்து பெருமையாக பேசுகிறார். அப்படியே பேச்சு சண்டையில் முடிவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.