விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி மற்றும் பாண்டியன் இரண்டு பெரிய முடிவுகளை எடுக்கிறார்கள். அந்தவகையில் இன்றைய எபிசோட் குறித்த முழு கதையையும் பார்ப்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் ஒரு அண்ணன் தம்பிகளின் கதையாக இருந்தது. முதல் சீசன் ரசிகர்களின் மனதைக் கவர்ந்ததையடுத்து வேகமாக அதை முடித்துவிட்டு, உடனே சீசன் 2 வும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சீசன் ஒரு அப்பா மகன்களின் கதையாக இருந்து வருகிறது.
அரசி இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று பாண்டியனிடம் கூறிவிடுகிறாள். பாண்டியனும் இதற்கு சம்மதிக்கிறார். இந்த விஷயம் அறிந்து, முழு குடும்பமே பாண்டியம் மாறிவிட்டார் என்று கூடி பேசுகிறார்கள்.
மறுபக்கம் அரசியின் இந்த முடிவு குமார் காதுக்கு செல்கிறது. குமார், அரசி இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று சொன்னதைக் கேட்டு நிம்மதி அடைகிறான். ஆனால், அரசி தன் மனதில் குமாருக்கு இடம் இல்லை என்றும், அவனை மன்னிக்கவே மாட்டேன் என்றும் பாண்டியனிடம் உறுதியாகச் சொல்கிறாள்.
இதற்கிடையில், பாண்டியன் வயலை விற்று அந்தப் பணத்தை செந்தில் மற்றும் கதிருக்குக் கொடுக்கப்போவதாகச் சொல்கிறான். இதைக் கேட்டதும் கதிர் வேண்டாம் என்று மறுக்கிறான். ஆனால், செந்தில் பணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறான். இந்த முடிவுக்கு பாண்டியன் உறுதியாக இருக்கவே, சரவணனும் தனது அப்பாவுக்கு ஆதரவாகப் பேசுகிறான்.
பிறகு, தங்கமயில் சரவணனிடம் பேச்சைக் கொடுத்து, பாண்டியன் குடும்பத்திற்கு அநியாயம் செய்வதாகப் பேசுகிறாள். கோபமடைந்த சரவணன், மயிலை எச்சரிக்கிறான். தன் மிரட்டலுக்குப் பயந்து இனி இருக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டுச் செல்கிறான்.
மறுநாள், பாண்டியன் தன் மகன்களுக்குப் பணம் கொடுப்பதற்கு முன் மீனாவின் அம்மா-அப்பாவை வரவழைக்கிறான். அப்போது, மீனா தான் லோன் எடுத்து குடும்பத்திற்கு உதவியதை நினைத்து நெகிழ்ந்து பேசுகிறான். 'மீனா என் மருமகளாகக் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று அவளைப் பாராட்டுகிறான்.
இதைக்கேட்ட மீனாவின் அப்பா, "கேட்காமலேயே லோன் போட்டு கொடுக்கும் மருமகள் யாருக்குத்தான் பிடிக்காது?" என்று நக்கலாகக் கேட்க, அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அடுத்த எபிசோடில் முழுமையாக காணலாம்.