
உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்படும் வண்டு, மான் கொம்பு வண்டு என்று கருதப்படுகிறது. இந்த வண்டின் விலையைக் கேட்டால் அசந்துவிடுவீர்கள். சொகுசு கார்களைவிட இந்த வண்டின் விலை அதிகம். அழுகிப்போன மரங்களை சாப்பிட்டு ஏழு ஆண்டுகள் வரை உயிர்வாழும் இந்த வண்டு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த பூமியில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன. பூச்சிகளும் உள்ளன.
சில பூச்சிகள் உணவாகவும் சில பூச்சிகள் ஆபத்து விளைவிப்ப தாகவும் உள்ளன. பூச்சிகளை நாம் அவ்வளவாக கண்டு கொள்வதில்ல. விவசாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வண்டுகளை மட்டுமே தேடி அழிக்கிறோம். பலவகை வண்டுகள் இருந்தாலும் இந்த மான் கொம்பு வண்டு 75லட்ச ரூபாய் முதல் ஒருகோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் Stag beetle என்று அழைக்கிறார்கள். இந்த வண்டுகளின் தாடைப்பகுதி பார்ப்பதற்கு மான் கொம்புபோல் இருப்பதால் மான் கொம்பு வண்டு என அழைக்கப்படுகிறது.
அழுகியமரங்களை மட்டுமே உண்டு வாழும் இந்த வண்டுகளின் எடை 2லிருந்து 6கிராம் இருக்கும். ஆண் வண்டுகள் 35லிருந்து 75 மி. மீ மற்றும் பெண் வண்டுகள் 30லிருந்து 50மி. மீ இருக்கும். இது அதிக விலைக்கு விற்கப்படுவதற்குக் காரணம் இந்த வண்டுகள் அரியவகை நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுவதுதான் என்று தெரிகிறது.
வெப்ப மண்டல பகுதிகளில் மட்டுமே வாழும் இந்த வண்டு குளிர்பிரதேசத்தில் இறந்துவிடுகின்றன. இந்த வண்டு இறந்த மரங்களையே சாப்பிடும் என்பதால் ஆரோக்கியமான மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.
முஷி என்ற ஜப்பானிய மாதப் பத்திரிகை ஜப்பானில் 3,00,000 மான் கொம்பு வண்டுகளுக்கு விசிறிகள் உள்ளதாக தெரிவிக்கிறது. நூற்றுக் கணக்கான மக்கள் இந்த வண்டை வேட்டையாடி வளர்க்கிறார்கள். ஜப்பானில் இரண்டு வகை ராட்க்ஷச வண்டுகள் உள்ளன.
டோக்யோ மற்றும் ஹிரயாமா பகுதிகளில் இந்த வண்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவைகள் 80மி.மீ அளவில் காணப்படும். இந்த இரண்டு இடங்களில் அதிக வண்டுகள் விற்பனை ஆவதாக கின்னஸ் ரெக்கார்டு அறிவித்திருக்கிறது. இவைகள் வெகு அபூர்வமாகவே காணப்படும் இனமாகும். இந்த வண்டு இனம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது
இந்த வண்டினம் அழிந்து வரும் இனமாகக் கருதப்படுகிறது.