விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் பாண்டியன் நாளுக்கு நாள் மகன்களை கடுமையாக நடத்துகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஒருபக்கம் தங்கமயில் பல பொய்களை சொல்லி திருமணம் செய்துவிட்டு, அதனை காக்கப் போராடி வருகிறார். அவர் நன்கு படித்த பெண் என்று பொய் கூறி திருமணம் செய்தாரல்லவா? ஆகையால், திருமணத்திற்கு பிறகு பாண்டியன் தங்கமயிலை வேலைக்கு போக சொல்லிவிட்டார்.
கொஞ்ச நாள் சமாளித்து வந்த தங்கமயில், ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல், ஆபிஸுக்கு போவது போல் நடித்தார். தற்போது அவர் ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.
அந்த கடையில் வேலை அதிகமாக இருந்ததால், லேட்டாகிவிட்டது. இதனால், தங்கமயில் கோமதிக்கு போன் செய்து ஆபிஸில் மீட்டிங் இருப்பதாக தெரிவித்தார். கோமதி சரவணனுக்கு போன் செய்து வரும்போது தங்கமயிலையும் அழைத்துக்கொண்டு வந்துவிடு என்று கூறுகிறார்.
சரவணன் அவள் ஆபிஸுக்கு போய் வாசலில் நிற்கிறார். ஆனால், தங்கமயில்தான் அங்கு இல்லையே. சரவணன் தங்கமயிலுக்கு போன் செய்கிறார். இதனால், தங்கமயில் என்ன செய்வதென்று தெரியாமல் படபடப்பாகிறார்.
மறுபக்கம் செந்தில் சோர்வாக தலைவலியுடன் வரும் செந்தில் நேரடியாக அடுப்பங்கரைக்கு சென்று கோமதி மற்றும் மீனாவிடம் ஒரு டீ கேட்கிறார். மீனா செந்திலுக்கு ஒரு டீ போட்டு எடுத்து வந்து கொடுக்கிறார்.
அப்போது அங்கு வந்த பாண்டியன் செந்திலிடம் கத்துகிறார். ஏன் கடையை மூடிட்டு இவ்வளவு சீக்கிரமாக வந்தாய். பணத்தை வசூல் செய்துவிட்டாயா? என்று கேட்டார்.
செந்தில் வாங்கிவிட்டேன் என்று சொல்லி பாண்டியனிடம் கொடுத்திருக்கிறார். அப்போது பாண்டியன் ஏதாவது எடுத்து இருக்கியா என்று திருடன் மாதிரி செந்திலை சந்தேகப்பட்டு கேட்கிறார்.
இது செந்திலுக்கும் மீனாவுக்கும் மிகப்பெரிய கஷ்டத்தை கொடுக்கிறது. கோமதியும் பாண்டியனை கண்டித்தார். ஆனால், பாண்டியன் எதையும் கண்டுக்காமல் போய்விட்டார்.
ரூமுக்குள் வந்த செந்தில், பாண்டியனின் அராஜகத்தை தாங்காமல் மீனாவிடம் கோபப்படுகிறார். மீனா சமாதானப்படுத்திய நிலையில் கோமதியும் வந்து செந்திலை ஆறுதல் படுத்துகிறார்.