
பிரபல விஜய் டிவி சீரியலில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் அண்ணன்கள், தம்பிகள் காட்சிகள் இருந்தது. இந்த பாகத்தில் அப்பா - மகன்கள் பாசப்போராட்டம் இருக்கிறது. அதில் மூத்த அண்ணனாக நடித்தவர் இரண்டாம் பாகத்தில் அப்பாவாக நடித்து வருகிறார். மேலும் ஹேமாவும் இதில் ஒரு மருமகளாக நடிக்கிறார். தற்போது முதல் பாகத்தில் ஜீவாவாக நடித்தவும் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளார்.
கிட்டத்தட்ட 5 வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சின்னத்திரை தொடர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த தொடரில் மீனா - ஜீவா ஜோடிக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இந்த சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா நடித்து வந்தார். இந்த சீரியலின் வளைகாப்பு காட்சியில் நிஜமாகவே கர்ப்பமுற்று சீமந்தம் நடத்தப்பட்டது.
சீரியலில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தாலும், நிஜத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக நினைத்தேன் என நடிகை ஹேமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது கர்ப்பமாக இருந்தேன். குழந்தை பிறந்த பிறகு நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தேன். காரணம் நடிப்பில் தீவிரம் காட்டினால் மகன் மறந்துவிடுவான் என்று நினைத்தேன். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் நாங்கள் குழந்தையை பார்த்துக் கொள்கிறோம் என கூறி தொடர்ந்து நடிக்க உத்வேகம் கொடுத்தனர்.
இருப்பினும் குற்ற உணர்ச்சி எனக்குள் இருந்தது. என் பையனை சரியா என்னால பாத்துக்க முடியவில்லை, அவனை நல்லபடியா என்னால் வளர்க்க முடியலையே என்று வருத்தமா இருக்கும். அந்த நேரத்தில் எனக்கு சீரியலில் நடிச்சவங்களும் நல்ல சப்போர்ட் செய்தார்கள். குடும்பத்தினரும் சப்போர்ட் செய்தாங்க. அதனால் தான் என்னால் அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடிந்தது என்றார்.