பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் குமரவேலு அரசிக்கு மோதிரம் போட்டுவிட்டார். இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்றே தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக பாண்டியனுக்கு அரசியால் அவமானம் நேரப்போகிறது என்பது மட்டும் உண்மை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில், செந்தில் ஒரு வேலை செய்கிறார். அதாவது தனது மாமனாரிடம் 10 லட்சம் வாங்கி அரசாங்க உத்தியோகத்தை பெற்று விட்டால் அப்பாவிடம் அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்த வேண்டாம் என்று செந்தில் குறுக்கு வழியில் போக தயாராகி விட்டார். ஆனால், மீனாதான் கொஞ்சம் அவரை தடுத்து நிறுத்தினார்.
அதேபோல் செந்தில் ஆசையை நிறைவேற்ற கதிர், பாண்டியனிடம் பணம் கேட்கிறார். பாண்டியனிடம் சென்று பணம் வேண்டும் என்று கேட்கிறார். உடனே பாண்டியன் எவ்வளவு என்று கேட்ட நிலையில், ஒரு லட்சம் என்று கூறுகிறார். பாண்டியனுக்கு ஷாக் ஆகிவிட்டது. அத்தனை பணத்திற்கு எங்கே போவேன். தேவையில்லாமல் செலவு செய்யாதே என்று அட்வைஸ் செய்கிறார்.
இதுகுறித்து கதிர் கூறும்போது, ஒரு லட்சத்திற்கே இப்படி சொல்கிறாரே, 10 லட்சம் என்றால், அவ்வளவுதான் என்று கூறுகிறார்.
மறுபக்கம் பழனி அண்ணன் வீட்டிற்கு சென்று சுகன்யாவை பார்க்க போகிறார். அங்கு சுகன்யா வாய்க்கு வந்தபடி பழனிவேலுவை திட்டி அவமானப்படுத்தி விட்டார். இதற்கு எதுவும் பதில் பேச முடியாமல் பழனி அவமானப்பட்டு போய் விடுகிறார். உடனே ராஜி அம்மா சுகன்யாவுக்கு அட்வைஸ் செய்கிறார்.
கதிர் ஒரு பங்க்ஷன் இருக்கு என்று சொல்லி ராஜியை கூட்டிட்டு போய் விடுகிறார். இதனைத் தொடர்ந்து அரசி பார்க்கில் குமரவேலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த குமரவேலு, கிப்ட்டுடன் வருகிறார். அதைப் பார்த்த அரசி நீங்களே எவ்வளவுதான் கொடுப்பீர்கள், நான் எதுவுமே உங்களுக்கு கொடுத்ததில்லை என்று கூற, குமரவேலு, நான் எவ்வளவு கெட்டவனாக இருந்தேன், நீதான் என்னை மாற்றினாய். உனக்காக இதைகூட செய்ய மாட்டேனா என்று கூறியிருக்கிறார்.
கிஃப்ட்டை பார்த்தால், மோதிரம். அரசி அது தங்க மோதிரம் என்பதால் தடுமாறினாள். ஆனால், குமரவேலு அதைப் போட்டுவிட்டு நமக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று கூறிவிடுகிறார்.