பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில், செந்திலுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் சரவணன் தனது வேலையை விட்டு கடைக்கு வருகிறேன் என்று கூறுகிறார். இதனையடுத்து இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியாகி விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 தொடர் அண்ணன் தம்பிகள் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீரியல் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஆரம்பமானது. இது அப்பா மகன்களின் கதையாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில், செந்தில் வீட்டுக்கு தெரியாமல் ஒரு பெரிய தொகையை எடுத்து தனது மாமனாரிடம் கொடுத்து அரசு வேலைக்கு ஏற்பாடு செய்கிறார்.
பணத்தை மாமனாரிடம் கொடுத்தது முதல் செந்திலுக்கும் மீனாவுக்கும் பயம்தான். வேலை ஏற்பாடு செய்து தருவார்களா? அல்லது ஏமாற்றிவிடுவார்களா? என்று.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி நேற்றைய எபிசோடில் கிடைத்துவிட்டது. செந்தில், மீனா, மீனாவின் அப்பா மூவருமே ஒரு அதிகாரியை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது அவர், செந்தில் வேலைக்கான ஆர்டரை கையில் கொடுத்தார். இதைப் பார்த்ததும் உண்மையா இல்லை கனவா என்று தெரியாமல், செந்தில் சந்தோஷத்தில் குதித்தார். பின் மாமனாரிடமும் மீனாவிடமும் எமோஷ்னலாக பேசினார்.
இதன்பின், செந்தில் அனைவரையும் வீட்டில் இருக்கும்படி கூறுகிறார். அனைவரும் ஒன்றுகூடி வழக்கம்போல் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறார்கள். அப்போது கையில் ஸ்வீட்டுடன் செந்தில் மற்றும் மீனா வருகிறார்கள். தனக்கு கிடைத்த ஆர்டரை பாண்டியனிடம் கொடுக்கிறார். அவர் சரவணனிடம் படிக்க சொல்கிறார். சரவணன், அதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
பின் அனைவரிடமும் விஷயத்தை சொன்னவுடன், குடும்பமே சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் குதிக்கிறார். அப்போது செந்தில், இதற்கெல்லாம் காரணம் மீனாவும் அவருடைய அப்பாவும் தான். அவர் மூலம் தான் எனக்கு இந்த வேலை கிடைத்தது என்று சொல்கிறார். இதனால் செந்தில் மளிகை கடை வேலைக்கு போக முடியாது.
அப்போது பாண்டியன், என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி இருந்தார். பின் சரவணன் வேண்டுமென்றால் நான் வேலையை விட்டுவிட்டு கடைக்கு வருகிறேன் என்று கூறுகிறார். அதற்குப்பின் செந்தில்- கதிர்- ராஜி- மீனா பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர், டிராவல்ஸ் ஏஜென்சி ஆரம்பிக்க போகிறேன். அதற்கான ஏற்பாடுகள் தான் செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.
இதுவரை செந்தில் பணம் கொடுத்துதான் வேலைக்கு ஏற்பாடு செய்தார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது பாண்டியன் வீட்டுக்கு வந்த மீனாவின் அப்பா இதுகுறித்து உளறிவிடுகிறார். இதனால் கடும்கோபம் கொண்ட பாண்டியன் செந்திலை அடிக்கப் போகிறார். இன்றைய ப்ரோமோ மூலம் இந்த உண்மை வெளிவந்தது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.