விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் சினிமாவுக்கு போன அரசி வசமாக சரவணனிடம் மாட்டிக்கொண்டார். இனி சரவணன் இதை வீட்டில் கூறுவாரா என்பதைப் பார்ப்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் தான் தனது மகன்களையும் மகளையும் நன்றாக வளர்த்திருக்கிறேன் என்று பாண்டியன் திடமாக இருக்கிறார். ஆனால், அதையெல்லாம் கெடுக்கும் விதமாக பல விஷயங்கள் நடக்கப்போகிறது. மறுபக்கம் தான் தான் சரி என்று நினைத்துக்கொண்டிருக்கும் பாண்டியன் எப்போது அனைத்தையும் புரிந்துக்கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை.
இப்போதைக்கு மூன்று பெரிய விஷயங்கள் சீரியலில் நகரந்து வருகின்றன.
ஒன்று தங்கமயில் பொய்களை சொல்லி திருமணம் செய்தார். இப்போது அந்த பொய்களை காப்பாற்ற பல பொய்களை சொல்லி வருகிறார்.
மறுபக்கம் செந்தில் நாளுக்கு நாள் தனக்கு மரியாதையே இல்லை, என்று தனது அப்பாவிடம் வருத்தப்பட்டு, மாமனார் பக்கம் சாய்ந்து வருகிறார்.
பின் அரசி, பாண்டியனின் எதிரி வீடான கோமதி அண்ணன் மகனான குமரவேலுவை காதலித்து வருகிறார். இதற்கு துணையாக பழனிவேலுவின் மனைவி பல செயல்களை செய்கிறார்.
அரசி சனிக்கிழமை அன்று வெளியே போகிறாள். கோமதி தடுத்து நிறுத்தி இன்னைக்கு எப்போவுமே லீவ் தானே இருக்கும். எங்கே போகிறாய் என்று கேட்கிறார். ஆனால், பாண்டியனே கோமதியை சமாளித்து அரசியை அனுப்பி வைக்கிறார்.
பழனி மனைவி கோமதியை அழைத்துக்கொண்டு தியேட்டருக்கு செல்கிறாள். அங்கு அவர்களை தனியே விட்டுவிட்டு கிளம்பிவிடுகிறார்.
படம் முடிந்ததும் குமரவேலு அரசி இருவரும் போட்டோ எடுத்துக்கொண்டு ரசித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது எதர்ச்சியாக சரவணன் அங்கு வருகிறார். வந்ததும் நேராக குமரவேலுவை அடிக்கப்போகிறார் என் தங்கச்சிய என்ன சொல்லி கூட்டிட்டு வந்தன்னு. அப்போது குமரவேலு, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று கூறிவிடுகிறார். ஷாக்கில் உறைந்துப் போய் நிற்கிறார் சரவணன்.
இப்போது சரவணன் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் தெரியவில்லை. வீட்டுக்கு சென்று அனைவரிடமும் இதுபற்றி கூறப்போகிறாரா? அல்லது அரசியை கண்டித்து விட்டுவிடப்போகிறாரா? என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.