
இன்றைக்கு சுவையான ராகி உப்புமா மற்றும் பொன்னாங்கன்னி கீரை துவையல் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
ராகி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்.
ராகி மாவு - 1 கப்.
எண்ணெய் - தேவையான அளவு.
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி.
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி.
வேர்க்கடலை - 1 தேக்கரண்டி.
கடுகு - 1 தேக்கரண்டி.
சீரகம் - 1 தேக்கரண்டி.
கருவேப்பிலை - சிறிதளவு.
இஞ்சி - 1துண்டு.
பெருங்காயத்தூள் - சிறிதளவு.
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
துருவிய தேங்காய் - 1 கப்.
நெய் - 1 தேக்கரண்டி.
ராகி உப்புமா செய்முறை விளக்கம்.
முதலில் ராகி மாவு 1 கப்பை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வீட்டு உதிரி உதிரியாக கலந்துவிடவும். மாவு கட்டியாகாமல் கலந்துவிட வேண்டும். இப்போது ஒரு ஸ்டீமர் பிளேட்டில் எண்ணெய்யை தடவி விட்டு அதில் ராகி மாவை சமமாக பரப்பி வைக்கவும். இதை 10 நிமிடம் ஆவியில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக வெந்த ராகி மாவை வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்து விட்டு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி, வேர்க்கடலை 1 தேக்கரண்டி சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அடுத்து கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
இத்துடன் துருவிய தேங்காய் 1 கப் சேர்த்து கலந்துவிடவும். இப்போது இத்துடன் வேகவைத்த ராகியை சேர்த்து நன்றாக கலந்துவிடவும். கடைசியாக 1 தேக்கரண்டி நெய்விட்டு கலந்துவிட்டு இறக்கினால் சுவையான ராகி உப்புமா தயார்.
பொன்னாங்கன்னி கீரை துவையல் செய்ய தேவையான பொருட்கள்.
பொன்னாங்கன்னி கீரை - 1 கட்டு.
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி.
எள் - 2 தேக்கரண்டி.
எண்ணெய் - தேவையான அளவு.
கொத்தமல்லி - 1 தேக்கரண்டி.
சீரகம் - 1 தேக்கரண்டி.
பூண்டு - 8
வரமிளகாய் - 5
சின்ன வெங்காயம் - 10
உப்பு - தேவையான அளவு.
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
புளி - 1 நெல்லிக்காய் அளவு.
பொன்னாங்கன்னி கீரை துவையல் செய்முறை விளக்கம்.
முதலில் பொன்னாங்கன்னி கீரையை நன்றாக அலசிவிட்டு 1 கட்டு கீரையை எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் 2 தேக்கரண்டி வேர்க்கடலை, 2 தேக்கரண்டி எள் ஆகியவற்றை நன்றாக வறுத்து மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது கடாயில் எண்ணெய் சிறிதளவு விட்டு 1 தேக்கரண்டி கொத்தமல்லி, 1 தேக்கரண்டி சீரகம், வரமிளகாய் 5, பூண்டு 8 ஆகியவற்றை வதக்கி மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் 10, பொன்னாங்கன்னி கீரை 1 கட்டு, நறுக்கிய தக்காளி 1, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, புளி 1 நெல்லிக்காய் அளவு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு இதை ஒரு சட்டியில் சேர்த்து அரைத்து வைத்த பொடியையும் சேர்த்து நன்றாக மசித்து எடுத்தால் சுவையான பொன்னாங்கன்னி கீரை துவையல் தயார். நீங்களும் இந்த ஹெல்தியான ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.