Pandian Stores 2
Pandian Stores 2

Pandian Stores 2: தங்கமயில் செய்த செயல்… மீனா, ராஜியை ஏற்றுக்கொள்வாரா கோமதி?

Published on

விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இரண்டு நாட்களாக நடக்கும் விஷயங்கள் குடும்பத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தவகையில் இன்றைய எபிசோட் குறித்துப் பார்ப்போம்.

பாண்ட்டியன் ஸ்டோர்ஸ் 1 தொடர் அண்ணன் தம்பிகளின் கதையாக அமைந்தது. பலருக்கும் பிடித்த சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் இருந்ததால், முதல் சீசனை முடிவுக்குக் கொண்டு வந்து, அடுத்த சீசனின் அறிவிப்பை வெளியிட்டனர். சீசன் 1ல் இருந்த சிலர் சீசன் 2 விலும் நடிக்கிறார்கள். ஆனால், இது அப்பா மகன்களில் கதையாக அமைந்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரும் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக ஓடிக்கொண்டுத்தான் இருக்கின்றது.

அந்தவகையில் இன்று நடக்கவிருப்பதைப் பார்ப்போம்.

ராஜி செய்த வேலைகள் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வர மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது. ராஜிக்கு துணையாக மீனா இருந்த விஷயம் தெரிந்து குடும்பத்தில் யாருமே அவர்களிடம் சரியாகப் பேசவில்லை. கோமதி ராஜியை பயங்கரமாக திட்டிவிடுகிறார். பின் அவர்கள் இருவரிடமும் பேசவே இல்லை. மறுபக்கம் கதிரும் கோபத்தில் ராஜியைத் திட்டுகிறார்.

மொத்த குடும்பமும் அவர்கள் இருவருக்கும் எதிராக இருந்த நிலையில் இந்த விஷயம் சரவணன் தங்கமயிலுக்கு தெரிய வந்தது. இதுதான் நேரம் என்று தங்கமயில் மீனா, ராஜியை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

மீனாவும் ராஜியும் கோமதியிடம் பேச முயற்சி செய்யும்போது, கோமதி முகத்தைக் கூட பார்க்காமல் செல்கிறார். அப்போது தங்கமயில் அவர்களுக்கு உதவி செய்வதுபோல் செய்து தனது கெத்தைக் காண்பிக்கிறார். கோமதியும் தங்கமயில் சொல்வதால்தான் இரண்டு பேரிடம் பேசுகிறேன் என்று கூறிவிடுகிறார்.  மீனாவுக்கு அது தெரிந்துவிட்டது என்றாலும், நன்றித் தெரிவிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
2ஆம் இடம்பிடித்த நடிகர் விஜய்!
Pandian Stores 2

ராஜியின் சித்தப்பா ராஜியின் நகையை சென்று அவர் அண்ணனிடம் கொடுத்துவிடுகிறார். இதனையடுத்து இன்று ராஜியின் நகைகளை வடிவிடம் போட சொல்லி கட்டாயப்படுத்துகிறார். ஆனால், அவர் போட மறுத்துவிடுகிறார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே பெரிய சண்டை ஏற்படுகிறது.

இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. ராஜியையும் மீனாவையும் பாண்டியன் மன்னிப்பாரா? வடிவு அந்த நகைகளை அணிவாரா? போன்றவற்றை நோக்கி கதைக்களம் நகர்கிறது.

logo
Kalki Online
kalkionline.com