அரசி திருமணம் குறித்தான உண்மைகள் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்து பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய எபிசோட் குறித்துப் பார்ப்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 தொடர் அண்ணன் தம்பிகள் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீரியல் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஆரம்பமானது. இது அப்பா மகன்களின் கதையாக இருந்து வருகிறது.
அந்தவகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில், ஒரு பக்கம் செந்தில் குறித்த கதையும், மறுபக்கம் அரசியும் குறித்த கதைகளமும்தான் விறுவிறுப்பாக நகர்கிறது. செந்தில் வீட்டுக்கு தெரியாமல் பணம் கொடுத்து அரசு வேலை வாங்கியது தெரிந்து குடும்பமே அதிர்ச்சியானது.
இப்போது அரசி குறித்த உண்மை வெளிவந்திருக்கிறது. சில எபிசோட்களாக அரசிக்கு பாண்டியன் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் நடத்தினர். இந்த சமயத்தில் குமரவேலு அரசியை மிரட்டி கஷ்டப்படுத்தினார். இதனால், அரசி ஒரு திட்டத்தைத் தீட்டி என்ன ஆனாலும் சரி, குமரவேலுவை பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். திருமணம் நடைபெறும் சமயத்தில், அரசி தாலியுடன் குமரவேலுவைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்.
இதனால், அனைவரும் குமரவேலுதான் அரசிக்கு தாலி கட்டினார் என்று நினைத்துக்கொண்டனர். அரசியை பாண்டியன் குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளவே இல்லை. திட்டித் தீர்த்துவிட்டார்கள். குமரவேலு, வீட்டிற்கு வந்த அரசியை கொடுமைப்படுத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறார். ஆனால், நிலைமை நேர்மாறாக அமைந்தது. அரசி குமரவேலுவை அடித்து உதைத்து பழி வருகிறார்.
இதனையடுத்து அரசி, மீனா மற்றும் ராஜியை கோவிலுக்கு வரசொல்லி அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டார். சுகன்யா குறித்தான விஷயம் அறிந்து மீனா, யாரை சும்மா விட்டாலும், அவரை மட்டும் விடவே கூடாது என்று கோபமாக பேசினார். அது மட்டுமில்லாமல் நீ இனி குமரவேலு வீட்டில் இருக்கத் தேவையில்லை, வா எங்களுடன் என்று அரசியை ராஜி மற்றும் மீனா கூப்பிடுகிறார்கள். ஆனால், அரசி போகவில்லை.
இப்படியான நிலையில்தான், கதிர் குமரவேலுவை வேறு ஒரு பெண்ணுடன் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்து குமரவேலுவுடன் சண்டையிடுகிறார். அப்போது ராஜி கோபத்தில் அனைத்து உண்மைகளையும் கூறிவிடுகிறார். இப்படியான நிலையில், இன்று ராஜி மற்றும் மீனாவும், "ஆம்! அரசி சொன்னது அனைத்தும் உண்மை" என்று கூறியவுடன், பாண்டியன் அரசி வீட்டுக்கு சென்று எங்களுடன் வந்துவிடு என்று கூறுகிறார். ஆனால், ராஜியோ, "இல்லை தாலி கட்டினாரோ இல்லையோ, நான் அவருடன் வாழ்ந்துவிட்டேன், ஆகையால் இங்குதான் இருக்கப்போகிறேன்." என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.