
இந்த கால கட்டத்தில் மாணவர்களுக்கு படிப்பு ஒரு பெரிய சுமையாகி விட்டதென்றே சொல்லலாம். எந்த ஒரு துறையிலும் competition இல்லாமல் இருப்பதே இல்லை. மாணவர்களுக்கு எல்லா எக்ஸாமிற்கும் படித்து எழுதி மார்க் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. முக்கால் வாசி மாணவர்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்டால் ராத்திரி பகல் கண் விழித்து படித்து விட்டு போனாலும் பரீட்சை எழுதும் போது மறந்து போய் விடுகிறது.
இன்னும் சில பேருக்கு எப்படி என்று கேட்டால் காலாணாடிற்கு படித்த பாடங்கள் எல்லாம் முழு பரீட்சை எழுதுவதற்குள் சுத்தமாக மறந்து போய் விடுகிறது. எனவே, திரும்பவும் எல்லாத்தையும் படிக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படுகிறது. இது அவர்களுக்கு டென்ஷனை அதிகரிக்கிறது. சரி, ஜப்பானியர்களின் தந்திரத்தின் படி எப்படி படித்தால் உங்களுடைய ஞாபக சக்தி கூர்மையாக இருக்கும் என்று பார்க்கலாமா?
பொதுவாகவே ஜப்பானியர்கள் உணவு விஷயத்திலும் சரி ஆரோக்கியத்திலும் சரி, எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அவர்கள் கையாளும் விதமே தனி. இந்த நினைவாற்றலை கூர்மையாக வைத்து கொள்ள உதவும் 6 சிறப்பான ஜப்பானியர்களின் தந்திரங்கள்:
1. ஷிச்சிஹோஹோ (7 முறை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்):
திரும்ப திரும்ப படிக்கும் போது நினைவாற்றல் அதிகமாகும். ஜப்பானியர்களின் கூற்றுப் படி 7 தரவை குறிப்பிட்ட இடைவெளியில் படிக்கும் போது அது நிரந்தரமாக நமக்கு நினைவில் இருக்கும். அதாவது,
1. ஆசிரியர் கற்பித்த உடனேயே மறுபடியும் ஒரு முறை படிக்க வேண்டும்.
2. பிறகு ஒரு நாள் கழித்து படிக்க வேண்டும்.
3. மூன்று நாட்கள் கழித்து படிக்க வேண்டும்.
4. ஏழு நாட்கள் கழித்து படிக்க வேண்டும்.
5. 15 நாட்கள் கழித்து படிக்க வேண்டும்.
6. 30 நாட்கள் கழித்து படிக்க வேண்டும்.
7. 90 நாட்கள் கழித்து படிக்க வேண்டும்.
2. கைடன் ஹௌ (படிக்கட்டு முறை):
படிக்கட்டிகளில் உள்ள படிகளைப் போல step by step ஆக அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். அடிப்படையில் ஆரம்பித்து சிக்கலான நிலைக்கு செல்ல வேண்டும். இந்த அடுக்கு கற்றலின் மூலமாக நீங்கள் முன்னேறும் போது ஏற்கனவே படித்ததை மேலும் மேலும் வலுபடுத்தப் படும். ஆகவே, உங்கள் நினைவாற்றல் மேம்படுத்தப் படும்.
3. குச்சிசுசாமி (வாய் ஹம்மிங் டெக்னிக்):
ஜப்பானிய மாணவர்கள் பெரும்பாலும் ஹம்மிங் முறையில் தான் படிக்கிறார்கள். அதாவது அமைதியாக உச்சரிக்கிறார்கள். இந்த முறையானது, செவிப் புலன் மற்றும் வாய் மொழி நினைவாற்றலை ஒருங்கிணைக்கிறது.
4. காஞ்ஜி காட்சிபடுத்தல் முறை (Kanji visualisation method):
மிகவும் சிக்கலான கருத்துகளை kanji visualisation முறையில் மாற்றவும். அதாவது அந்த கருத்துகளை தொகுத்து நீங்களே அதை கதைகளாகவோ அல்லது படங்களாகவோ மாற்றவும். இப்படி முக்கியமான கருத்துகளை உங்களின் சொந்தமான முறையில் visualisation செய்யும் போது மனப்பாடம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் இவ்வாறு visualisation முறையில் படிக்கும் போது அது மூளைக்குள் நிரந்தரமாக save ஆகி விடும்.
5. Zazen நினைவக மீட்டமைப்பு:
படிப்பதற்கு முன், ஐந்து நிமிடத்திற்கு ஜென் தியானம் (zen meditation) செய்ய வேண்டும். இவ்வாறு தியானம் செய்வதால் மனக் குழப்பம் நீக்கப் படுகிறது. அமைதியான மன நிலையில் படிக்கும் போது நம் மூளையானது கருத்துக்களை உள்வாங்கி அதை நிரந்தரமாக சேமிக்கிறது.
6. ஷுஜி (calligraphy learning method):
கடினமான சொற்களையும், கருத்துகளையும், அழகாகவும் மெதுவாகவும் calligraphy முறைப்போல எழுதி பயிற்சி செய்யவும். இவ்வாறு பயிற்சி செய்யும் கை மற்றும் மூளை இணைப்பு நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
மாணவர்களே இந்த ஆறு தந்திரங்களில் உங்களால் முடிந்ததை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக உங்களின் நினைவாற்றல் மேம்படும்.