பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசியின் திட்டம் அனைத்தும் மீனா ராஜிக்கு தெரியவந்திருக்கிறது. குமரவேலுவை பழி வாங்கத்தான் இத்தனை திட்டம் என்று அரசியே கூறுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசிக்கு பாண்டியன் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் நடத்தினர். இந்த சமயத்தில் குமரவேலு அரசியை மிரட்டி கஷ்டப்படுத்தினார். இதனால், அரசி ஒரு திட்டத்தைத் தீட்டி என்ன ஆனாலும் சரி, குமரவேலுவை பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். திருமணம் நடைபெறும் சமயத்தில், அரசி தாலியுடன் குமரவேலுவைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார். இதனால், அனைவரும் குமரவேலுதான் அரசிக்கு தாலி கட்டினார் என்று நினைத்துக்கொண்டனர். அரசியை பாண்டியன் குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளவே இல்லை. திட்டித் தீர்த்துவிட்டார்கள்.
குமரவேலு, வீட்டிற்கு வந்த அரசியை கொடுமைப்படுத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறார். அவரை அடிக்கப் போகும்போது அரசி மிஸ் ஆகிறார். இறுதியில் வேகமாக கை ஓங்கும்போது அரசி கீழே குனிந்துவிடுகிறார். அப்போது செவுற்றில் குத்திவிடுகிறார். வலியில் கத்துகிறார் குமரவேலு. அப்போது, பாட்டியும் அம்மாவும் வந்து என்னவென்று கேட்கும்போது. குமரவேலு சமாளித்து விடுகிறார்.
இதனையடுத்து பழனிவேல், ராஜி மற்றும் மீனாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்கிறார். அங்கு அரசியை சந்திக்கிறார்கள். அப்பொழுது மீனா பொறுமையாக ஒவ்வொரு விஷயத்தையும் அரசிடம் கேட்கும் பொழுது அரசி, குமரவேலு போட்டோ வைத்து பிளாக் மெயில் பண்ணியது, மன்னிப்பு கேட்க சுகன்யா என்னை அனுப்பி வைத்தது, போன்ற எல்லா விஷயங்களையும் சொல்லிவிடுகிறார்.
அத்துடன் எனக்கு குமரவேலு தாலி கட்டவில்லை, நம்ம குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சில சூழ்ச்சிகளை செய்தான். அதனால் தான், எனக்கு வேறு வழி இல்லாமல் நானே தாலி கட்டி விட்டேன் என்று சொல்கிறார்.
சுகன்யா குறித்தான விஷயம் அறிந்து மீனா, யாரை சும்மா விட்டாலும், அவரை மட்டும் விடவே கூடாது என்று கோபமாக பேசுகிறார். அது மட்டுமில்லாமல் நீ இனி குமரவேலு வீட்டில் இருக்கத் தேவையில்லை, வா எங்களுடன் என்று அரசியை ராஜி மற்றும் மீனா கூப்பிடுகிறார்கள். ஆனால் அரசி இப்போதைக்கு போக மாட்டாள், குமரவேலுவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நிச்சயம் அதே வீட்டில் தான் இருப்பார்.