விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் பாண்டியனின் கஞ்சத்தனத்தால், செந்தில் குறுக்குவழியில் அரசு வேலைக்கு போக முடிவெடுத்திருக்கிறார்.
பழனிவேலு கல்யாணம் பண்ணிட்டு வந்த சுகன்யா ரெட்டை வேஷம் போட்டு பாண்டியன் வீட்டில் உறவாடி கெடுக்கப் போகிறார். ஏற்கனவே பழனிவேலுவுக்கு சேர வேண்டிய சொத்துக்களை கேட்டு அண்ணிகளிடம் விசாரித்து வைத்து விட்டார். இப்போது பாண்டியன் வீட்டுக்கு சென்று நாடகமாடி கிரிமினல் வேலை செய்யப் போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் பாண்டியன் குடும்பத்தில் விரிசலும் விழலாம். குமரவேலுவிடம் அரசியை சிக்க வைத்து கல்யாணத்தை பண்ணி வைக்கப் போகிறார்.
அதன் முதற்கட்டமாக அரசியிடம் குமரவேலுவை பற்றி கூறி, அவரை காதலில் விழ செய்துவிட்டார்.
தற்போது பழனி சினிமாவுக்கு போகலாம் என்று முடிவெடுத்துவிட்டு பாண்டியனிடம் வந்து எப்படி சொல்வதென்று தெரியாமல் தயங்கி நிற்கிறார். செந்தில்தான் பாண்டியனிடம் சொல்லி அனுமதி வாங்கி தருகிறார். அதேபோல், பாண்டியன் 500 ரூபாய் கொடுத்து பாத்து சிக்கணமாக செலவு செய்ய வேண்டும் என்று சொல்லி பழனிவேலை அனுப்பி வைக்கிறார்.
வீட்டில் சுகன்யா கிளம்பி உட்கார்ந்திருக்கிறார். வெகுநேரம் அவரும் பழனியும் காத்திருக்கிறார்கள். சரவணன் வீட்டுக்கு வந்தவுடன் பைக் கீ கொடுத்து அனுப்பிவைக்கிறார்.
சுகன்யா டபுள் கேம் ஆடுவதும், பழனிவேலை ஆட்டிவைப்பதும் வீட்டில் யாருக்கும் தெரியவில்லை.
மறுபக்கம் செந்தில் ஒரு வேலை செய்கிறார். அதாவது தனது மாமனாரிடம் 10 லட்சம் வாங்கி அரசாங்க உத்தியோகத்தை பெற்று விட்டால் அப்பாவிடம் அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்த வேண்டாம் என்று செந்தில் குறுக்கு வழியில் போக தயாராகி விட்டார். ஆனால், மீனாதான் இப்போதைக்கு அவரை தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஆனால் எப்படியும் முதல் சீசன் மாதிரி செந்தில் கொஞ்ச நாளைக்கு மாமனார் பக்கம் சாய்ந்து அங்கே சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்த பின்பு தான் பாண்டியன் கண்டிப்பு புரிய ஆரம்பிக்கும்.
Same Same but different என்பதுபோல, கதை ஒன்னுதான் ஆனா, சீசன் வேற என்பதுபோல்தான் இருக்கிறது இந்த கதை.