கோடையை குளிர்ச்சியாக்கும் எனர்ஜி பூஸ்டர்!

Summer energy booster
Summer energy booster
Published on

கோடையை குளிர்ச்சியாக்கும் இளநீருக்கு கோடை வந்தாலே டிமாண்ட் எகிறி விடும். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற பானமான இளநீர், இன்னும் பல நன்மைகளைத் தருகிறது. இதோ இளநீரின் மருத்துவ குணங்கள்:

1. உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இளநீர் ஒரு வரப்பிரசாதம். இளநீரில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

2. சிறுநீரகக்கல் பிரச்சினை இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த தீர்வு இளநீர் தான். இந்தப் பானத்தில் அதிக அளவுக்கு பொட்டாசியம் இருப்பதால், சிறுநீரகக் கற்களைக் கரைப்பதுடன் மீண்டும் வராமல் தடுக்கவும் செய்கிறது.

3. பல நோய்களுக்கு டாக்டர்கள் இளநீரை ஒரு டானிக் போலவே பயன்படுத்தச் சொல்கிறார்கள். கோடையில் வரும் வெக்கை நோய்களுக்கு இளநீர் அருமருந்து.

4. கோடை கால சமயங்களில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் தினமும் இரண்டு இளநீராவது பருக வேண்டும். இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம், மலக்குடல் சிறப்பாக செயல் பட உதவும்.

5. வேறு எந்தப் பழச்சாறுகள், பானங்ளை விடவும் குறைந்த அளவில் கலோரி உடையது இளநீர். மற்ற இனிப்புப் பானங்களை விடவும் ஆரோக்கியம் அளிக்கக் கூடியது இளநீர் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இனிப்பும், கலோரியும் குறைவாக இருப்பதால், இளநீர் நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது.

6. ஒரு டம்ளர் இளநீருடன், வறுத்துப் பொடித்த ஒரு ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் ஓமம் கலந்து தினமும் குடித்து வந்தால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும். இதை உணவு உண்ட பின் தான் பருக வேண்டும்.

7. ஒற்றைத் தலைவலியால் அவஸ்தை படுகிறவர்களுக்கு இளநீரில் இருக்கும் மாங்கனீஸ் நல்ல ஒரு மருந்து போல் செயல் படும்.

8. இளநீரில் இருக்கும் ஊட்டச்சத்து சருமத்தில் உள்ள இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்க பயன்படுகிறது என்பது மட்டுமல்லாமல் சருமத்தில் நோய்கள் வராமல் இருக்கவும் துணை புரிகிறது.

9. இளநீர் குறைந்த கலோரி உடையது என்பதால் சில கிலோ எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்கும், இருக்கும் எடையை பராமரிக்க விரும்புகிறவர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது.

10. பெண்கள் இளநீர் தினமும் குடித்து வந்தால் இளநீரில் இருக்கும் சத்துக்கள் நீண்ட, ஆரோக்கியமான, பளபளப்பு மிக்க முடி வளர்சியைத் தூண்டுகிறது.

11. செரிமானத்தை மேம்படுத்த இளநீர் பயன்படுகிறது.

12. இளநீரில் இருக்கும் ரிபோப்ளேவின், தயமின், பேதோஜெனிக் அமிலம் இவை மூன்றும் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வை விரட்ட உதவுகிறது. இதனால் மனதுக்கு உற்சாகமும், ஊட்டமும் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
அடர்த்தியான புருவம் பெற அவசியம் இத தெரிஞ்சுக்கோங்க!
Summer energy booster

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com