பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா ராஜியிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் தங்கமயில்… கலவரம் வெடிக்குமா?

Pandian stores 2
Pandian stores 2
Updated on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலின் ரகசியம் ஒன்று மீனா ராஜிக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து இதனை வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்வார்களா என்று தெரிந்துக்கொள்வோம்.

அப்பா மகன்களின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் இரண்டு மகன்கள் காதல் திருமணம் செய்துக்கொண்டதாக எண்ணி பாண்டியன் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், போக போக மருமகள்களிடம் சகஜமாக பேசுகிறார். ஆனால், முதல் மகனுக்கு பாண்டியனே முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

ஆனால், இந்த மருமகள், அதாவது தங்கமயில் பல பொய்களை சொல்லி திருமணம் செய்திருக்கிறார். இந்த பொய்கள் மட்டும் பாண்டியனுக்கு தெரியவந்தால், அவ்வளவுதான். இந்தப் பொய்கள் பாண்டியனுக்கு எப்போது தெரியவரும். தெரிந்தவுடன் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் இப்போதைய கதை நகர்வு.

முன்பெல்லாம் தங்கமயில் சற்று ஓவராக நடந்துக்கொள்வார் என்றாலும், இப்போதெல்லாம் எங்கே பொய்கள் தெரிந்துவிடுமோ என்று பயப்படுகிறார். அந்த வகையில் இப்பொழுது நடக்கிற தாலி பெருக்கு பங்க்ஷனில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதிலும் பதட்டத்துடனே இருக்கிறார். 

இந்த நிகழ்ச்சியில் ராஜியின் நகை அனைத்தையும் அவருடைய அம்மா திருப்பி வாங்கிவிடுவதால், தங்கமயில் அம்மா தங்கமயிலின் நகைகளைப் போட்டுவிடும்படி கூறுவிடுகிறார். கோமதி வேண்டாம் என்று கூறிவிட்டு செல்கிறார். உடனே தங்கமயில் அவரது அம்மாவை மாடிக்குக் கூட்டிச் சென்று, ஏன் இப்டிலாம் பண்ற, அதுல 8 சவரன் தவற மற்றதெல்லாம் கவரிங் தானே. இதுல எந்த தைரியத்துல நீ அப்டி சொன்ன என்று கேட்கிறார்.

இதையும் படியுங்கள்:
காசாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ845… ஒருவேளைதான் உணவு… கதறும் மக்கள்!
Pandian stores 2

இது அனைத்தையும் ராஜியும் மீனாவும் கேட்டுவிட்டனர். அவர்கள் வந்து கேட்டவுடன், தங்கமயில் குடும்பம் எதையோ சமாளிக்கப் பார்த்தது. ஆனால், தங்கமயில் பதற்றத்தில் உண்மையை உடைத்துவிடுகிறார்.  எங்களிடம் பணம் வசதி கிடையாது, வெறும் எட்டு சவரன் மட்டும்தான் தங்கம். மற்றது எல்லாம் கவரிங் நகை தான் என்ற விஷயத்தை சொல்லிவிட்டார். இதைக் கேட்டு மீனா மற்றும் ராஜி வாய் அடைத்து போய் அதிர்ச்சியாகி விட்டார்கள்.

தங்கமயிலும் அவருடைய அம்மாவும் இதை யாரிடமும் கூறக்கூடாது என்று கெஞ்சுகின்றனர். உடனே மீனா ராஜி இந்த விஷயத்தை யாரிடமும் மறைக்கவே முடியாது. அவ்ளோ பெரிய விஷயம் அது என்கின்றனர்.

ஆனால், பின் தங்கமயிலும் அவருடைய அம்மாவும் அழுததைப் பார்த்து கோமதியிடம் கூட சொல்லமாட்டோம் என்று கூறிவிடுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com