தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல அபத்தமான தொடர்களுக்கு மத்தியில் விஜய் தொலைக்காட்சியில் தினசரி இரவு 8மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோா் பாா்ட் 2 (தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை) தொடரில் சில லாஜிக் மீறல் இருந்த போதிலும் கெளரவமான குடும்பப் பிண்னனியில் சில சமயங்களில் சமுதாய அக்கறையோடும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
கண்டிப்புக்கு பெயர் போன குடும்பத்தலைவர் பொய் பேசுவதை விரும்பாதவர், அதுஒரு நல்ல உதாரணம், அதே போல ஒற்றுமையான மனைவி, நல்ல பிள்ளைகள், பாசமான மகள்,என்ற கோணத்திலும் கதை நகர்வதும் ஆரோக்கியமே! இதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக செந்தில்-மீனாஜோடி,அதேபோல மீனாவின் பணக்கார தகப்பனாா் கதாபாத்திரம்.
நல்ல பாசமுள்ள மகனான சரவணன் மனைவி தங்கமயிலின் தாய் தந்தை இவர்களால் நல்ல குடும்பத்தில் சில தவறுகள் நடப்பது காட்சிப்படுத்தப்படுகிறது மீனா-செந்தில் காதல் திருமணம் என்றாலும் அவரது தகப்பனாா் பணக்காார் என்ற ரீதியில் தனது மகளையும் மாப்பிள்ளையையும் வசதியாக வாழ வைக்க முயற்சி செய்து அவர்பக்கம் இழுக்கப்பாா்க்கிறாா்.மீனா இந்த விஷயத்தில் புகுந்த வீடு பக்கம் நிற்பது யதாா்த்தம். அப்படியும் மாப்பிள்ளை மனதில் அரசு வேலை காட்டி பத்துலட்சம் பணம் ஏற்பாடு செய்யச்சொல்லி ஆசையை தூண்டி விடுகிறாா்.இது அனைத்து மாமனாரும் நினைப்பது தான் மீனாவும் அரசு வேலை பாா்க்கிறாா்.
செந்தில் தனியாக இருக்க ஆசைப்பட்டு மீனாவுக்கு கிடைத்த குவாா்டர்ஸ்க்கு போகிறாா். இதுவிஷயத்தில் மீனாவுக்கு உடன்பாடு கிடையாது,அதேபோல லஞ்ச லாவண்யத்திற்கு ஆசைப்படாமல் வேலை பாா்த்து வருகிறாா் .
தனது தகப்பனாா் வங்கியில் கட்டச்சொல்லிய பணத்தில் பத்துலட்சத்தை எடுத்து மாமனாாிடம் கொடுக்க அரசு வேலைக்கு போய்விடுகிறாா் செந்தில். பின்னர் தகப்பனாா் பணம் விஷயமாய் வங்கிக்கு செந்திலை அனுப்ப விஷயம் பொிதாகி மீனா தனது சம்பளசேமிப்பில் இருந்து பணம் கொடுக்கிறாா். அதனைத்தொடர்ந்து மாப்பிள்ளைக்கு பண ஆசையை காட்டி மாமனாரே அலுவலகத்தில் லஞ்சம் வாங்க ஆசையை மூட்டி மூளைச்சலவை செய்து செந்திலும் விரைவில் பணக்காரன் ஆக எண்ணி லஞ்சம் வாங்க ஆரம்பிக்கிறாா். மீனா ஆரம்பத்திலிருந்தே கணவரின் போக்கில் சந்தேகப்பட்டு கணவன் நிறைய பணத்தை வீட்டிற்கு கொண்டுவருவதை தோண்டித்துருவி கேட்கிறாா். லஞ்சம் வாங்காதீங்க போலிசில் மாட்டினால் வேலை போய்விடும் ஜெயிலுக்கு போகவேண்டியதாகும் என எவ்வளவோ அறிவுரை சொல்லியும் செந்தில் தனது தவறை மறைக்க பொய் சொல்வதோடு வாங்கிய லஞ்சப்பணத்தை மாமனாாிடம் மீனாவுக்கு தொியாமல் கொடுத்தும் வைக்கிறாா்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள் என்பதை வலியுறுத்தும் விதமாக கதை நகர்வது சிறப்பான ஒன்று.அதேபோல கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது என வலியுறுத்தி கதையை நகர்த்தும் டைரக்டரின் யுக்தி பாராட்டலாம்.
அதேபோல சரவணனுக்கு பெண்பாா்த்த இடத்தில் படிக்காத பெண்ணை பொிய படிப்பு படித்ததாக காட்டி கவரிங் நகைகளைப்போட்டு வயதை குறைத்துச் சொல்லி பல பொய்களைச் சொல்லி தங்கமயிலின் தாய் தந்தையர்கள் திருமணம் செய்து வைத்து விடுகிறாா்கள் தாய் தகப்பனாா் பேச்சைக்கேட்டு தங்கமயிலும் தாயின் நிா்பந்தம் காரணமாக மனசாட்சிக்கு பயந்து வாழ்ந்துவருகிறாள் உண்மைகள் தொிய வரவே சரவணாவின் குழந்தையை சுமந்த படியே பிாிந்து வாழ்கிறாள். ஆனால் தாயின் பேச்சைக்கேட்டு உண்மையை சொல்லாமல் விட்டது தன் தவறுதான் என்பதை உணர்ந்து ஒரு சில ஒரு பொய்களால் பெண்ணின் வாழ்க்கை எவ்வாறு சீரழிந்து போகிறது என்பதையும் அதனால் குடும்பம் எவ்வாறு சிதைந்து போகிறது என்பதையும் ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே என்ற வரிகளுக்கு ஏற்ப பொய்யான தாய்தந்தையரால் பெண்ணின் வாழ்வு எப்படி தடம் மாறுகிறது என்பதையும், பொய் எவ்வாறு பல குடும்பங்களை சீரழித்து விடும் என்பதையும் இயக்குனர் வெகு நோ்த்தியாக சொல்லியுள்ளாா். இது போன்ற நல்ல தொடர்களில் கொஞ்சம் குறைபாடுகள் இருந்தாலும் பொய் சொல்வது தவறு என்பது தெளிவாககாட்சிப்படுத்தியவிதம் அருமை.
ஆக இதுபோல குடும்பத்திற்கு ஏற்றவாறு கதைக்களத்தை அமைத்து நல்லகருத்துகளை மெகா தொடர் மூலம் சமுதாயத்திற்குகொண்டு சேருங்கள் அதுவே சிறப்பாகும்.