பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் அரசியின் காதல் பாண்டியன் வீட்டுக்கு தெரியவந்துவிட்டது. இந்த நிகழ்வை எதிர்பார்த்துதான் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இதுகுறித்தான முழு கதையையும் பார்ப்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் தான் தனது மகன்களையும் மகளையும் நன்றாக வளர்த்திருக்கிறேன் என்று பாண்டியன் திடமாக இருக்கிறார். ஆனால், அதையெல்லாம் கெடுக்கும் விதமாக பல விஷயங்கள் நடக்கப்போகின்றன. தங்கமயில் பொய்களை சொல்லி திருமணம் செய்தார். இப்போது அந்த பொய்களை காப்பாற்ற பல பொய்களை சொல்லி வருகிறார்.
மறுபக்கம் செந்தில் நாளுக்கு நாள் தனக்கு மரியாதையே இல்லை, என்று தனது அப்பாவிடம் வருத்தப்பட்டு, மாமனார் பக்கம் சாய்ந்து வருகிறார்.
பின் அரசி, பாண்டியனின் எதிரி வீடான கோமதி அண்ணன் மகனான குமரவேலுவை காதலித்து வருகிறார். இதற்கு துணையாக பழனிவேலுவின் மனைவி பல செயல்களை செய்கிறார்.
அரசி சனிக்கிழமை அன்று வெளியே போகிறாள். கோமதி தடுத்து நிறுத்தி இன்னைக்கு எப்போவுமே லீவ் தானே இருக்கும். எங்கே போகிறாய் என்று கேட்கிறார். ஆனால், பாண்டியனே கோமதியை சமாளித்து அரசியை அனுப்பி வைக்கிறார்.
படம் முடிந்ததும் குமரவேலு அரசி இருவரும் போட்டோ எடுத்துக்கொண்டு ரசித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது எதர்ச்சியாக சரவணன் அங்கு வருகிறார். வந்ததும் நேராக குமரவேலுவை அடிக்கப்போகிறார் என் தங்கச்சிய என்ன சொல்லி கூட்டிட்டு வந்தன்னு. அப்போது குமரவேலு, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று கூறிவிடுகிறார்.
சரவணன் ஒரு அப்பா பிள்ளை என்பதால், கண்டிப்பாக வீட்டில் கூறிவிடுவார், சீரியல் விறுவிறுப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல்தான் தற்போது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.
சரவணன் அங்கிருந்து அரசியை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது வரும் வழியில் செந்திலுக்கு போன் செய்து அப்பாவை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வா என்று சரவணன் சொன்னார். பின் ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சரவணன், என்ன வேலை செய்திருக்கிறாய்? இதுதான் நீ படிக்க போகும் லட்சணமா? என்று ஆவேசப்பட்டு கத்தி இருந்தார்.
பாண்டியன் வீட்டில் அனைவரும் வந்து கூடிவிட்டனர். அப்போது அரசியை அழைத்து வந்த சரவணன், அரசி ஒருவரை காதலிக்கிறார், உங்கள் அனைவரிடமும் பொய் சொல்லிவிட்டு படத்துக்கு போய்விட்டு வந்திருக்கிறாள் என்று கூறுகிறார்.
மேலும் அவள் காதலிப்பது வேறு யாரும் இல்லை குமரவேல் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் மீண்டும் பேரதிர்ச்சி ஆக இருக்கிறது. அனைவரும் அரசியை பயங்கரமாக திட்டுகிறார்கள். பாண்டியன் மட்டும் எதுவும் பேசமுடியாமல் அதிர்ச்சியில் மயங்கி விழுகிறார்.