"பாண்டியன் ஸ்டோர்ஸ் 2" அதிரடி திருப்பம்: சுகன்யாவின் சுயரூபம் அம்பலம்! இனி என்ன நடக்கும்?

Pandian Stores 2
Pandian Stores 2
Published on

பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 தொடர் அண்ணன் தம்பிகள் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீரியல் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஆரம்பமானது. இது அப்பா மகன்களின் கதையாக இருந்து வருகிறது.

அந்தவகையில் கடந்த சில எபிசோட்களாக அரசிக்கு பாண்டியன் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் நடத்தினர். இந்த சமயத்தில் குமரவேலு அரசியை மிரட்டி கஷ்டப்படுத்தினார். இதனால், அரசி ஒரு திட்டத்தைத் தீட்டி என்ன ஆனாலும் சரி, குமரவேலுவை பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். திருமணம் நடைபெறும் சமயத்தில், அரசி தாலியுடன் குமரவேலுவைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார். இதனால், அனைவரும் குமரவேலுதான் அரசிக்கு தாலி கட்டினார் என்று நினைத்துக்கொண்டனர். அரசியை பாண்டியன் குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

திட்டித் தீர்த்துவிட்டார்கள். குமரவேலு, வீட்டிற்கு வந்த அரசியை கொடுமைப்படுத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறார். ஆனால், நிலைமை நேர்மாறாக அமைந்தது. அரசி குமரவேலுவை அடித்து உதைத்து பழி வாங்குகிறார்.

இப்படியான நிலையில்தான், கதிர் குமரவேலுவை வேறு ஒரு பெண்ணுடன் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்து குமரவேலுவுடன் சண்டையிடுகிறார். அப்போது ராஜி கோபத்தில் அனைத்து உண்மைகளையும் கூறிவிடுகிறார். இப்படியான நிலையில், இன்று ராஜி மற்றும் மீனாவும், "ஆம்! அரசி சொன்னது அனைத்தும் உண்மை" என்று கூறியவுடன், பாண்டியன் அரசி வீட்டுக்கு சென்று எங்களுடன் வந்துவிடு என்று கூறுகிறார். 

இதையும் படியுங்கள்:
பணக்கஷ்டத்துக்கு இனி No சொல்லுங்க… இந்த 50-30-20 ஃபார்முலா உங்க வாழ்க்கையை மாத்தும்!
Pandian Stores 2

அரசியும் தாலியை கழற்றி குமரவேலு மேல் தூக்கி எறிந்துவிட்டு பாண்டியனுடன் செல்கிறார். இதனையடுத்து இன்றைய எபிசோடில், பாண்டியன் சந்தோஷத்தில் எல்லோருக்கும் பரோட்டா சிக்கன் வாங்கி கொடுக்கிறார். குடும்பத்தினர் அனைவரையும் உக்கார வைத்து கையில் சாப்பாடு கொடுக்கிறார். அப்போது மீனா, ராஜி இருவருமே இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் சுகன்யா தான் என்று சொல்லிவிடுகிறார்கள். சுகன்யா ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை அரசி வாழ்க்கையில் என்னனெல்லாம் செய்தார் என்று ஒன்று விடாமல் சொல்கிறார்கள்.

சுகன்யா எவ்வளவோ சமாளிக்கிறார். ஆனால், பாண்டியன் குடும்பத்தினர் அதை நம்புவதாக தெரியவில்லை. இதனால் பாண்டியன் குடும்பமே ஷாக் ஆகிறது. கோபத்தில் பழனி, சுகன்யாவை திட்டுகிறார். அதற்குப்பின் கோமதி, சுகன்யாவிடம் பேச வருகிறார். இத்துடன் சீரியலின் இன்றைய எபிசோட் முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com