Pennum Porattum
Pennum Porattum

விமர்சனம்: பெண்ணும் பொரட்டும் (2026) - காமெடி டிராமா!

'பெண்ணும் பொரட்டும்' நெட்ஃபிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.
Published on
ரேட்டிங்(3 / 5)

15/02/2026 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப் படம் 14/03/2026 முதல் Netflix தளத்தில் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.

அறிமுக இயக்குனர் ராஜேஷ் மாதவன் இயக்கத்தில் உருவான இந்த லோ பட்ஜெட் படம், முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டு பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம். படத்தைப் பற்றிப் பேசும் முன், படத்தின் இயக்குனர் கடந்து வந்த பாதை பற்றிப் பார்த்து விடலாம்.

பகத் பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் (2016) படத்தில் துணை நடிகராக அறிமுகம் ஆனார், தொண்டி முதலும் திரிசாக்ஷியும் (2017) படத்தில் உதவி இயக்குனர் ஆகப் பணி ஆற்றினார். நா தான் கேஸ் கொடு (2022) படத்தில் முக்கிய வேடம் ஏற்ற இவர் மரணமாஸ் (2025) படத்த்தில் சைக்கோ வில்லன் ஆக நடித்து கலக்கியவர். நம்ம ஊர் வடிவேலுவின் ஆரம்ப கட்ட ஒல்லி உருவத்துடன் இருக்கும் இவர் தன் உடல் மொழியாலேயே பிரமாதமாக காமெடி செய்யக்கூடியவர். இந்தப் படத்தில் ஒரு சின்ன ரோலிலும் நடித்து படத்தையும் இயக்கி இருக்கிறார்.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகி ஒரு கிராமத்தில் வசிக்கிறாள். இவள் செல்லமாக ஒரு நாய் வளர்த்து வருகிறாள். அந்த நாய்க்கு ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு விட்டது என்ற வதந்தி பரவி அந்த கிராமமே நாயைத் துரத்தி விட முயற்சிக்கிறது. அந்த நாயை கிராமத்து மனிதர்கள் துரத்துவது காமெடியாக ஒரு டிராக்கில் காட்டப்பட்டுக் கொண்டே வருகிறது.

நாயகனுக்கு காதல், கல்யாணம் இவற்றில் எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. ஆனால் திருமணத்துக்குப் பின் நிகழ இருக்கும் சம்பவம் மட்டும் தனக்கு நிகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். தனது ஆசையை நாயகன், நாயகிக்கு வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலம் சொல்கிறான். நாயகி அந்த மெஸேஜைக் கேட்டதும் செம கடுப்பாகி நாயகனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறாள். 'இந்த மாதிரி என் கிட்டே பேசும் வேலை எல்லாம் வெச்சுக்க வேண்டாம்' என எச்சரித்து வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறாள்.

இந்த விஷயம் கிராமம் முழுக்கப் பறவி விடுகிறது.

நாயகனின் அம்மா ஒரு மொய் விருந்துக்கு கிராம மக்களை அழைத்திருக்கிறாள். விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் மொய் விருந்து பற்றி தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு விளக்கம் வைத்து இருப்பார்கள். வீட்டில் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் செய்யும் முன் செலவுக்குப் பணம் திரட்ட கிராமங்களில் மொய் விருந்து வைப்பார்கள். விருந்துக்கு வரும் சொந்த பந்தங்கள் சாப்பிட்டு விட்டு மொய் வைத்து விட்டு செல்வார்கள்.

தன் மகனுக்கு இப்போதைக்குத்திருமணம் நடக்காது என்பதை உணர்ந்த நாயகனின் அம்மா தனது பழைய வீட்டைப் புதுப்பிக்க ஊர் மக்களை அழைத்து மொய் விருந்து வைக்கிறாள், இந்த விருந்தில் கலந்து கொள்ளும் ஊர் மக்கள் செய்யும் காமெடி கலாட்டாக்கள் ஒரு டிராக்.

நாயகியின் அம்மாவிடம் பலர் வந்து அந்த வாட்ஸப் மெசேஜை பற்றி வத்தி வைக்க தன் சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்துக் கொண்டு நாயகனின் அம்மா வீட்டுக்கு வந்து அந்த மொய் விருந்து நடக்கும்போதே நாயகியின் அம்மா கலாட்டா செய்கிறாள்.

இதற்குப் பின் நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித் திரைக்கதை.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: Funky (2026) - ரொமாண்டிக் காமெடி டிராமா!
Pennum Porattum

நாயகன், நாயகி இருவரும் புதுமுகங்கள். இவர்கள் படத்தில் வரும் நேரம் கொஞ்ச நேரம் தான். கிராம மக்கள் செய்யும் அழிச்சியாட்டங்கள் தான் மொத்தத் திரைக்கதையுமே.

நாயகி ஆக ரைனா ராதா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். சந்தன சிலை போல இருக்கிறார். குறைவான நேரமே இவர் திரையில் வந்தாலும் நிறைவான நடிப்பு.

வைசக்த் சுகுணன் பாடல்கள் எழுதி இருக்கிறார். கதை, திரைக்கதையை ரவி சங்கர் எழுதி இருக்கிறார். சாபின் உரலிகண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிராமிய அழகைக் கண் முன் நிறுத்தி இருக்கிறார், சாமன் சாக்கோ எடிட்டிங்க் செய்து இருக்கிறார். படத்தின் ரன்னிங்க் டைம் 2 மணி நேரம்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: யார்றா அந்தப்பையன் நான் தான் அந்தப்பையன் (2026) - ரொமாண்டிக் காமெடி டிராமா!
Pennum Porattum

சபாஷ் டைரக்டர்

  • நாயகன், நாயகி இருவரும் பெயரளவிற்குத்தான். மொத்தமே 20 நிமிடங்கள் தான் வருகிறார்கள். படத்தில் டூயட் இல்லை. லவ் போர்சன் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க காமெடி தான்.

  • ஒரு நாயின் பார்வையில் மனிதர்களை ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்கும் ஐடியா, தாட்பிராசஸ் அருமை. நாய்க்குக் குரல் கொடுத்திருப்பவர் டொவினோ தாமஸ் (தமிழ் டப்பிங்கில் வேறு ஒருவர்)

  • சகித்துக் கொள்வதற்குக் கத்துக்கறோம், மறக்கறதுக்கும் கத்துக்கனும எமோசன்ஸ் வேற வாழ்க்கை வேற. இந்த இரண்டு கருத்துக்களையும் முன்னிறுத்திய விதம்.

  • நடிக, நடிகையரின் டிராமாடிக் ஆக்டிங்கைப் பார்த்துப் பழகிய நமக்கு அச்சு அசல் கிராமிய மக்களின் யதார்த்த நடிப்பு பாரதி ராஜா படங்களை நினைவுபடுத்துகிறது.

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • கதை சொல்லும் பாணி புதிது என்றாலும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். நாயகன், நாயகி வரும் நேரம் மிகக்குறைவே என்பது சிலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

  • ஆர் பாண்டியராஜனின் நெத்தி அடி படத்தில் முதல் 14 நிமிடங்கள் கிராமத்து மக்களின் காமெடி சேசிங் சீன் தான். அதே சீன் படம் முழுக்க வந்தால் எப்படி இருக்கும்? பலரும் என்ன இது, கதையே இல்லை? எனக்கேள்வி எழுப்பக்கூடும்

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் U. ஆனால் கிராமிய வசைச்சொற்கள் இருக்கும்.

சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாலியான, கலகலப்பான மாறுபட்ட நகைச்சுவைப்படம்.

logo
Kalki Online
kalkionline.com