

கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், தற்போது இளைஞர்களை மையமாகக் கொண்ட கதைக்களத்தை தேர்வு செய்து கதாநாயகனாக நடித்து வருவதன் மூலம் பிரபலமடைந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் திறமையாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் பிரதீப் ரங்சநாதன், இதற்கு முன் லவ் டுடே மற்றும் கோமாளி போன்ற வெற்றிகரமான படங்களின் மூலம் இயக்குனராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
கடந்த ஆண்டு இயக்குனர் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 17-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ‘டியூட்’. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நாயகியாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மமிதா பைஜு நடிக்க இவருடன் சரத்குமார், ஹ்ருது ஹாரூன், நேஹா ஷெட்டி, சத்யா, ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா மற்றும் கருட ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பைசன் போன்ற பிற படங்களின் போட்டி இருந்தபோதிலும், காதல், காமெடி கதைக்களத்தில் உருவான டியூட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன்,
27 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வருகிறது.
திரையரங்குகளில் மாஸாக ஓடும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது. அதன்படி, நெட்ஃபிக்ஸ் டியூட்டின் ‘ஓடிடி’ உரிமையை பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கையின்படி, இந்தப் படம் வரும் நவம்பர் 14-ம்தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், ரசிகர்கள் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், திரையரங்குகளை விட ஓடிடியில் டியூட் அதிக வரவேற்பைப் பெறுமா, அல்லது பின்னடைவைச் சந்திக்குமா என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.