சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமான கதைக்களம்தான் தற்போது நகர்ந்து வருகிறது. இது எப்படி நடந்தது என்று ஆனந்திக்கே தெரியவில்லை என்பதால், தலையில் அடித்து அழுகிறார்.
அன்பு ஆனந்தி மகேஷ் என மூவரின் முக்கோண காதல் கதைதான் சிங்கப்பெண்ணேவின் முழு கதையும். அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது மகேஷுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் மகேஷ், ஆனந்தி மீதுள்ள காதலில் பலவற்றை தியாகம் செய்தார். இதனால் ஆனந்தி, அன்புவும் தானும் காதலிப்பதாக மகேஷிடம் கூறிவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அவ்வாறே அன்பு மற்றும் ஆனந்தியின் காதல் குறித்து மகேஷுக்கு தெரியவந்தது முதலில், அவர் இருவருக்கும் எதிராக மாறினார். அன்புக்கும் மகேஷுக்கும் பல சண்டைகள் கூட வந்தன. அன்பு மீது வீண் பழி சுமத்தப்பட்டது. ஒரு வழியாக அன்பு தன் மீது விழுந்த பழியை முழுவதுமாக நீக்கி விட்டான்.
இருந்தாலும் மகேஷ், அன்பு, ஆனந்தி மூன்று பேர் இடையேயான உறவு சுமுகமாக இல்லை. இப்படியான நிலையில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் மகேஷுக்கு தெரிய வருகிறது. ஆனந்தி குழப்பத்தில் மீண்டும் டெஸ்ட் செய்துப் பார்க்கிறார். அப்போதும் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது எண்ணி சோகமாக நடந்துக்கொண்டு போகும்போது, கழிவு நீர் தொட்டியில் விழுந்துவிடுகிறார். அவரை மகேஷ் தான் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். ஏற்கனவே அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது அவனுக்கு உச்சகட்ட கோபத்தை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் மகேஷை நிலைகுலைய செய்கிறது.
டாக்டர் ஆனந்தியிடம் இதற்கு யார் காரணம் என்று கேட்கிறார். இதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை என்று ஆனந்தி கத்தி அழுகிறார். ஆனால் மகேஷ் திடீரென உள்ளே வந்து யார் காரணம் என எனக்குத் தெரிந்து விட்டது என்று சொல்கிறான். இந்த ப்ரோமோவை பார்க்கும் போது மகேஷ் அன்பு மீது தான் சந்தேகப்படுகிறான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
உண்மையில் என்ன நடக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை. ஆனந்தி மற்றும் அன்புவின் காதல் கதை எங்கு போய் முடியும் என்பதும் தெரியவில்லை.