சாதனை படைத்த வானத்தைப்போல சீரியல்... என்ன தெரியுமா?

Vanathai Pola serial
Vanathai Pola serial

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல், 1000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் வாரம் வாரம் முன்னிலை வகித்து வரும் சீரியலில் ஒன்று தான் வானத்தை போல சீரியல். அண்ணன் - தங்கை பாசத்தை மையமகா கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த டிசம்பர் மாதம் 2020ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

தொடர்ந்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் மூன்று வருடங்களுக்கு மேல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியல் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை கடந்து சாதனை செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை, சீரியல் குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் இணைந்த ராட்சசன் கூட்டணி... ஜோடி சேர்ந்த மலையாள நாயகி!
Vanathai Pola serial

இந்த சீரியலை இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் சாந்தினி பிரகாஷ், அஸ்வந்த் கார்த்தி, கீதா லட்சுமி, செந்தி குமாரி, மகாநதி ஷங்கர், மனோஜ் குமார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 3 வருடத்திலேயே டாப் 3 இடங்களை வாரம் வாரம் பிடித்து அசத்தி வரும் இந்த சீரியல் குழுவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com