மீண்டும் இணைந்த ராட்சசன் கூட்டணி... ஜோடி சேர்ந்த மலையாள நாயகி!

Ratsasan 2 movie update
Ratsasan 2 movie update

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ராட்சசன்" என்கின்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரானின் மிரட்டும் இசையில், இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் மற்றும் அம்மு அபிராமி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

க்ரைம் திரில்லர் படமாக உருவான இந்த படத்தின் 2ஆம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். வெண்ணிலா கபடி குழு படம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான விஷ்ணு விஷாலுக்குத் திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் ராட்சசன் தான். தற்போது நடிகர் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து லால் சலாம் படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.

இதையும் படியுங்கள்:
'மயிலிறகே' பாடலில் வரும் நடிகை நிலாவை நியாபகம் இருக்கா? 40 வயதில் திருமணம்... வைரலாகும் போட்டோஸ்!
Ratsasan 2 movie update

தற்போது நடிகர் விஷ்ணு விஷால் அவரின் 21வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராட்சசன் படத்தை இயக்கிய இயக்குநர் ராம்குமார் தான் இயக்குகிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் மலையாள திரை உலகில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள நாயகி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. ப்ரேமலு மற்றும் ஜீவி பிரகாஷின் ரெபெல் திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை மமிதா பாய்ஜு இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com