மனோஜிடம் வசமாக மாட்டிக்கொண்ட ரோஹினி – சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்!

Siragadika aasai
Siragadika aasai
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் பல திருப்பங்களை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்கவிருக்கிறது என்று பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பலருக்கும் பிடித்தமான சீரியலாகும். அந்தவகையில் இன்றைய எபிசோட் முடிவில் ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளது.  

அண்ணாமலை முத்துவிடம் நீங்க எதுக்காக இப்படி சண்டைப் போட்டுட்டு இருக்கீங்க என்று கேட்க, அதற்கு முத்து அம்மா சந்தோஷப்படணும் என்பதற்காக தான் நான், ரவி, ஸ்ருதி, மீனா எல்லாரும் சண்டை போட்ட மாதிரி நடிச்சிட்டு இருந்தோம் என்று ரூமிற்குள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே ஜாலியாக ஒருவருக்கு ஒருவர் வெளியே திட்டுவது போன்று கேட்கும்படி இவர்கள் சண்டை போட்டதை பற்றி முத்து சொல்கிறார். அதனைக் கேட்டு அண்ணாமலை அலுத்துப் போகிறார்.

பின் ரோஹினியின் அம்மா மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ரோஹினியிடம் மருத்தவர் அவரது அம்மாவுடைய கண்டிஷன் குறித்து சொன்னதும் ஷாக் ஆகிறார். மறுபக்கம் ஸ்ருதி தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு நம்ம சொந்தக்காரங்க ஒருத்தங்க சைக்காலஜிஸ்டா இருக்காங்களே அவங்க எங்க கிளினிக் வச்சிருக்காங்க என்று கேட்கிறார்.

அதற்கு ஸ்ருதியின் அம்மா சென்னையில்தான் என்று சொன்னதும், அப்போ அங்க போய் நீ முதல உன்னை செக் பண்ணு. நீ எதற்காக மீனாவை போய் திட்டுனா என்று கேட்க, அதற்கு ஸ்ருதியின் அம்மா உன்னைப் பற்றி உங்க மாமியார்தான் என்னிடம் கோபப்பட்டாங்க. அதனால்தான் நான் மீனாவிடம் போய் பேசினேன் என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி அவங்க திட்டுனா நீ மீனாவை திட்டுவியா? உனக்கு கொஞ்சம் கூட மூளை இல்லையா என்று திட்டுகிறார்.

இதையும் படியுங்கள்:
தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநர், நடிகை, தயாரிப்பாளர்... மூன்றும் ஒருவரே!
Siragadika aasai

இதனையடுத்து நாளை, மனோஜ், ரோஹினிக்கு போன் செய்து நீ எப்போது வருவே என கேட்கிறார். அதற்கு அவர் நான் வித்யாவை பார்க்க வந்துள்ளேன் என்று சமாளிக்கிறார். அதேசமயத்தில் வித்யா கடைக்கு வருகிறார்.

அதைப்பார்த்து மனோஜ், வித்யாவுடனா இருக்க என மறுபடியும் கேட்க, அதற்கு ஆமாம் என்று கூறிவிட்டு தனது தோழிக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறுகிறார்.

உடனே வித்யா, நான் உன் கடையில் தான் உள்ளேன், மனோஜ் என்னை பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறார் என கூறுகிறார்.

இனி ரோஹினி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com