Queen Of Tamil Cinema
Queen Of Tamil Cinema

தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநர், நடிகை, தயாரிப்பாளர்... மூன்றும் ஒருவரே!

Published on

தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநர், முதல் பெண் தயாரிப்பாளர் மற்றும் முதல் பெண் கதையாசிரியர் ஆகிய மூவரும் 'ஒரு' பெண்ணே. அவர் யார் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

சினிமா வட இந்தியாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தென் இந்தியாவிற்கு வந்த சமயத்திலும், தமிழகத்திற்கு சினிமா அறிமுகமான சமயத்திலும் படம் எடுப்பதே ஒரு பெரிய சவாலாக இருந்தது. தமிழ்த் திரையுலகில் ஆண்கள் அதிகம் இருந்த சமயத்தில், அவர்கள் சினிமாவை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில், ஒரு பெண்ணும் திரைத்துறையில் தைரியத்துடன் களமிறங்கி அதில் பெருமையையும் பெற்றிருக்கிறார் என்றால், அது நம் தமிழ் திரையுலகிற்கே பெருமைதானே.

முதலில் சினிமாவில் வந்த படங்கள் ஊமைப் படங்களே. அத்தகைய ஊமைப்படங்களில் முதலில் அறிமுகமான நடிகை என்றால், டி.பி.ராஜலட்சுமிதான். இவர் நடித்த கோவலன் படம் 1929ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு உஷா சுந்தரி என்ற ஊமை படத்திலும் நாயகியாக நடித்தார். ஊமைப் படத்தின் முதல் நாயகியான இவரே பேசும் படத்தின் முதல் நாயகியும்கூட. முதல் பேசும்படமான காளிதாஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். நடிகையாக நடித்து வந்த இவர், முதன்முதலாக ஒரு படத்தை தயாரிக்கவும் செய்தார். 1936ம் ஆண்டு மிஸ் கமலா என்ற படத்தை தயாரித்து, தமிழ்த்திரையுலகின் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற படத்தைப் பெற்றார்.

இதையும் படியுங்கள்:
பாக்கியாவிடம் இறுதிச் சடங்கை செய்ய சொல்லும் ஈஸ்வரி.... ஷாக்கான கோபி!
Queen Of Tamil Cinema

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் இப்படத்திற்கு கதை எழுதி, அந்த கதையை இயக்கியதும் டி.பி.ராஜலட்சுமிதான். இந்த ஒரு படத்தின்மூலம் தமிழ்த் திரையுலகின், முதல் பெண் இயக்குநர் மற்றும் முதல் பெண் கதையாசிரியர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

சினிமா உருவான சமயத்தில் எந்த தொழில்நுட்பமும் இன்றி ஒரு படத்தை இயக்குவது எவ்வளவு கஷ்டமான காரியம். அப்படிப்பட்ட ஒரு சமயத்திலேயே ஒரு இயக்குநராக, நடிகையாக, கதையாசிரியராக, தயாரிப்பாளராக என அனைத்து பக்கங்களிலும் சினிமா துறையில் பெரும் பங்களிப்பாற்றிய டி.பி.ராஜலட்சுமியே “Queen of Tamil Cinema” என்று போற்றப்படுகிறார்.

logo
Kalki Online
kalkionline.com