ரீல் மருமகளை ரியல் மருமகளாக்கிய மெட்டி ஒலி சாந்தி!

Metti Oli Serial Actor Marriage
Metti Oli Serial Actor Marriage

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகைக்கு சீரியலை தொடர்ந்து நிஜத்திலும் நடிகை சந்தியா மருமகளாக வரவுள்ளதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பட்டிமன்ற பேச்சாளராக இருந்து சின்னத்திரையில் நுழைந்தவர் தான் நடிகை சந்தியா. இவர் தொகுப்பாளர் விஜே நகைச்சுவை பேசாளர் என பன்முக திறமைகளை கொண்டவர். இவர் கண்மணி தொடர் மூலம் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் சத்யா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டுப்பொண்ணு, நளதமயந்தி உள்ளிட்ட தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். இவர் பி.காம், பி.எல், எம்.எல் பட்டதாரியும் கூட.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சக்திவேல்’ தொடரில் நடித்து வருகிறார். இவருக்கும் முரளி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள முரளி, என்னுடைய வாழ்வில் நீ வந்ததற்கு நன்றி! நீ வந்த பின்பு, இன்னும் அதிகம் சிரிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்னை சரியாகப் புரிந்து கொண்டுள்ளாய் என் வருங்கால பொண்டாட்டியே எனக் கூறியுள்ளார்.

இந்த சீரியலில் மெட்டில் ஒலி சாந்தி தான் இவருக்கு மாமியாராக நடித்து வருகிறார். இவரின் மகன் தான் முரளி என்பதால் தற்போது நிஜ வாழ்க்கையில் சாந்திக்கு மருமகளாக ஆகியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
லேடி கெட்டப்பில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்... வைரலாகும் போட்டோ!
Metti Oli Serial Actor Marriage

இவர்களின் நிச்சயதாரத்தம் முடிந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதே ஆச்சரியம். எப்போதும், சீரியல் நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலே காதல் திருமணமாகதான் இருக்கும். ஆனால் இவர்களின் திருமணம் அரேஞ்ச் மேரேஜ் என்பதால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

சீரியலில் ரீல் மருமகளாக நடிக்கும் நடிகையே நிஜ வாழ்க்கையிலும் மருமகளாக்க நினைத்திருக்கிறார் மெட்டி ஒலி புகழ் சாந்தி. இவர்களின் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com