பிக்பாஸில் ஸ்கூல் டாஸ்க்… ஜாக்குலின் சொன்ன அந்த வார்த்தை.. பள்ளியைவிட்டு வெளியேறிய சத்யா!

BB 8
BB 8
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பிக்பாஸ் சீசன் 8ல் நேற்று முதல் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஜாக்குலின் சொன்ன வார்த்தையால், சத்யா ஸ்கூலைவிட்டு வெளியேறிவுள்ளார்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து ரவீந்திரன், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். கடந்த வாரம் சுனிதா எவிக்ட் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஸ்கூல் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு வன்மத்தைக் கொட்டி வருகின்றனர்.

ஸ்கூல் நிர்வாகியின் மகளாக வர்ஷினி தேர்வாகி இருக்கிறார். இவர் விவாகரத்து செய்து வெளியே அனுப்பிய மாப்பிள்ளை வைஸ் பிரின்ஸ்பல் என்ற கேரக்டரில் அருண் நடிக்கிறார். இதற்கு அடுத்ததாக ஃபாரினில் இருந்து வந்து மாரல் கிளாஸ் எடுக்கும் டீச்சராக ஜாக்லின் இருக்கிறார். தமிழ் டீச்சர் மஞ்சரி மற்றும் லவ் ஃபெயிலியர் ஆகி pt டீச்சராக இருக்கும் ஜெஃப்ரி போன்று பல்வேறு கேரக்டரில் பலர் மாறி இருக்கிறார்கள்.

அந்தவகையில் ஜாக்குலின் மாரல் க்ளாஸ் எடுக்கிறார். அப்போது க்ளாஸ் எடுக்காமல் ஒவ்வொருத்தரையும் பற்றி பேசுகிறார். அதாவது நமக்கு தெரிந்த விஷயம் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைப்பது அவசியம் இல்லை. நமக்குத் தெரிந்திடுச்சு என்பதற்காக அறிவாளியும் இல்லை என்று தீபக் குறித்து ஜாக்குலின் சொல்கிறார்.

மேலும் எந்த இடத்தில் பேசணும் எங்கு என்ன செய்யணும் என்பதை கவனித்து பேச வேண்டும் என்பதற்கு ராணவ்வை எடுத்துக்காட்டாக சொல்கிறார். இதற்கு ராணவ் பதில் அளிக்கும் விதமாக இது உங்களுக்கும் பொருந்தும் என்று சொல்கிறார்.

இதையும் படியுங்கள்:
இராணுவத்தில் சேர ஆசைப்பட்ட நகுல் - 'தி டார்க் ஹெவன்' படத்தின் மூலம் ஆசை நிறைவேறுமா?
BB 8

பின் சத்யாவை பற்றி பேசும்போது, சத்யா இது மாரல் க்ளாஸ் போல் இல்லை, நாமினேஷன் மாதிரி இருக்கு என்று சொல்கிறார். அதற்கு ஜாக்குலின் நான் எடுக்கும் க்ளாஸைதான் நீங்கள் கவனிக்க வேண்டும். பிடிக்கவில்லை என்றால் வெளியே போங்கள் என்கிறார். உடனே சத்யா வெளியேறிவிட்டார்.

இதனையடுத்து சத்யாவிற்கும் பவித்ராவுக்கும் பெரிய சண்டை நடக்கிறது. இருவரும் காரசாரமாக பேசிக்கொள்கிறார்கள். இதன்பிறகு என்ன நடக்கும் என்பதை எபிசோடில் முழுமையாக பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com