கார் விபத்தில் சிக்கி பலியான பிரபல சீரியல் நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

Pavitra Jayaram
Pavitra Jayaram

பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இருக்கும் ஹனகெரேவை சேர்ந்தவர் பவித்ரா ஜெயராம். Trinayani எனும் தெலுங்கு சீரியலில் திலோத்தமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அவர் கன்னட சீரியல்களிலும் நடித்து வந்தார்.

அவர் தன் கணவரும், நடிகருமான சந்திரகாந்த், சகோதரியுடன் ஆந்திராவில் இருந்து தன் சொந்த ஊரான கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹனகெரே பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். இந்த காரை டிரைவர் ஸ்ரீகாந்த் ஓட்டினார். இவரது கார் தெலங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மறுபுறம் ஹைதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் வலது புறத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் நடிகை பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே காரில் பயணித்த உறவினர் அபேக்‌ஷா, ஓட்டுநர் ஸ்ரீகாந்த், சக நடிகர் சந்திரகாந்த் ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பவித்ரா ஜெயராம் உடலை பிரேத பரிசோதனைக்காக அம்மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்கள்:
'உங்க அப்பா அப்பாவாக போறாரு' குடும்பத்தாரிடம் உண்மையை சொன்ன பாக்கியா... அடுத்து என்ன நடக்கும்?
Pavitra Jayaram

பவித்ரா ஜெயராம் மறைவு திரையுலகினரிடத்திலும், ரசிகர்களிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஓரளவு குணமடைந்த பிறகே விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த பவித்ரா ஜெயராம் கோஜாலி, நீலி, ராதா ராமா என பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ரோபோ ஃபேமிலி என்ற கன்னட படத்திலும் நடித்தார். பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பவித்ரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சாலைகளில் யாரும் அதிவேகமாக செல்ல வேண்டாம் எனவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தன் மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, மிஸ் யூ பாப்பா, தயவு செய்து திரும்பி வந்துவிடு என கண்ணீருடன் நடிகர் சந்திரகாந்த் பதிவிட்டு வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com