பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் சூப்பர் நடிகை... வைரலாகும் போஸ்ட்!

Pandian Stores 2
Pandian Stores 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ஆம் பாகத்தில் புது எண்ட்ரியாக ரசிகர்களின் பேவரைட் நடிகை வந்துள்ளார்.

சீரியல்களுக்கு எப்போது தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. காலை சீரியலை விட, இரவு ஸ்லாட்டில் ஓடும் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். அப்படி பல வருடங்களாக இரவு 8 மணி ஸ்லாட்டில் ஓடும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகம் கடந்த சில ஆண்டுகளாக ஓடி முடிந்த நிலையில் தற்போது 2ஆம் பாகம் ஓடி கொண்டிருக்கிறது. சகோதர்களின் பாசத்தை வெளிகாட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் 1ஆம் பாகத்தை தொடர்ந்து, 2ஆம் பாகம் தந்தை மகன் பாசத்தை காட்டுகிறது. இந்த சீரியலின் டிஆர்பிக்காக அவ்வபோது பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

முதல் சீசன் ஓடிய அளவு கூட இரண்டாவது சீசனுக்கு வரவேற்பு இல்லை. இதில் சில புதுமுகங்களும், பழைய முகங்கள் பலரும் நடிக்கிறார்கள். கதைக்களத்தில் இப்போது தான் கொஞ்சம் விறுவிறுப்பு இருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் புது கேரக்டர் எண்ட்ரி கொடுக்கவுள்ளது. இப்போது கதையில் சரவணனுக்கு பெண் கிடைக்காமல் குடும்பமே என்னென்னவோ செய்கிறார்கள். இந்த நிலையில் தான் சீரியல் குறித்து வந்த புதிய புரொமோவில் பிரபல சீரியல் நடிகை சரண்யா என்ட்ரி கொடுக்கிறார்.

இதையும் படியுங்கள்:
செழியனை மாப்பிள்ளை பார்க்க வந்த பெண் வீட்டார்... அதிர்ச்சியில் பாக்கியா செய்த செயல்!
Pandian Stores 2

அவரது என்ட்ரியை பார்த்த ரசிகர்கள் இனி தொடர் சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள். நடிகை சரண்யா இதற்கு முன் பல சீரியல்களில் கலக்கிய நிலையில், அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தற்போது ஜோடி சீசனில் நடனமாடி அசத்தி வரும் இவர் தற்போது சிரியலில் எண்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இது தொடர்பான இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com