ஹிந்தி பிக்பாஸில் தமிழ் நடிகை ஸ்ருதிகா கலந்துக்கொண்டார். அந்தவகையில் அவர் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறப்போவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ் பிக்பாஸிற்காக காத்துக்கொண்டிருந்த சமயத்தில், எந்த பிரபலங்கள் தமிழ் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கப் போகிறார்கள் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகா அர்ஜூன் சத்தம் இல்லாமல் ஹிந்தி பிக்பாஸில் போட்டியாளராக நுழைந்தார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
தமிழ் பிக்பாஸில் ஏன் ஸ்ருதிகாவை கூப்பிடவில்லை, ஸ்ருதிகாவின் வெகுளித்தன்மையை வட இந்தியாவில் ஏற்றுக்கொள்வார்களா? போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்தன. மேலும் சிலர் ஸ்ருதிகாவின் வீடியோவை மட்டும் தமிழில் டப்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிறக்கினர். மேலும் சிலர் என்னடா இது புதுசா ஹிந்திலா புரியுது என்று ஸ்ருதிகாவின் வீடியோ க்ளிப்பைப் பார்த்து பதிவிட்டனர். ஹிந்தி பிக்பாஸை கண்டுக்காதவர்கள், இப்போது ஸ்ருதிகாவிற்காகவே ஹிந்தி பிக்பாஸ் பார்க்கிறார்கள்.
அந்தவகையில் ஹிந்தி பிக்பாஸில் ஸ்ருதிகாவின் வீடியோ மட்டும் அதிகளவில் தமிழகத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அந்தவகையில், திடீரென்று ஸ்ருதிகா போட்டியைவிட்டு விலகுவதாக சொல்லி அழுத வீடியோ வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து தமிழ் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். சீசன் 18ல் ஸ்ருதிகாவுக்கு நெருங்கிய தோழியாக இருப்பவர்தான் Chum Darang. இந்த வார எலிமினேஷில் இருக்கும் நபரை காப்பாற்றிவிட்டு மற்றொருவர் அந்த இடத்திற்கு வருவதற்கான டாஸ்க் நடந்துள்ளது. இந்த டாஸ்க்கில் ஸ்ருதிகா தனது தோழி Chum Darangஐ காப்பாற்றி எலிமினேஷன் இடத்தில் அவர் இடம்பெற்றிருக்கிறார்.
இதனால், இருவரும் கதறி அழுதுள்ளனர். ஸ்ருதிகாவும் அழுதிருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ருதிகா போல்டாக விளையாடி வந்தார். இவரின் குணம் மற்றும் திறமையினால் ஹிந்தி ரசிகர்களை மட்டுமல்ல, ஹிந்தி பிக்பாஸ், சல்மான் கான் என அனைவரையும் பிடித்துவிட்டார்.
இந்த வார இறுதியில் சல்மான் கான் போட்டியாளர்களை சந்திக்கும்போது யார் எலிமினிஷேன் ஆவார் என்பது தெரியவரும். ஒருவேளை ஸ்ருதிகா எலிமினேட் செய்யப்பட்டால், கட்டாயம் தமிழ் ரசிகர்கள் அவர் வெற்றிபெற்று திரும்பவதுபோலவே வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.