சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே தொடரில் அன்பு ஆனந்தி இருவரும் சேர்ந்துவிட்ட பின்பு அடுத்தடுத்து விறுப்பாக கதை நகர்ந்து வருகிறது.
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷ் என ஒரு முக்கோண காதல் கதை காட்டப்படுகிறது. அன்பு தான்தான் அழகன் என்று சொல்லாமல் ஆனந்தியை காதலித்து வந்தார். அதேபோல் மகேஷும் ஆனந்தியை காதலிக்கிறார்.
இதனையடுத்து ஆனந்திக்கு உண்மை அனைத்தும் தெரிந்துவிட்டது. அதாவது அன்புதான் அழகன் என்பது ஆனந்திக்கு தெரியவந்தது. பிறகு இருவரும் தங்களது காதலை தெரிவித்துக் கொண்டார்கள். மகேஷ் இதை ஏற்றுக்கொள்வாரா என்று கேள்விகள் எழுந்த நிலையில், அவரிடம் அழகன்தான் அன்பு என்ற விஷயம் மறைக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து நேற்று ஆனந்தி தனது நண்பர்களுக்கு அழகன்தான் அன்பு என்ற விஷயத்தை சொல்ல அழைக்கிறார். அப்போது ஆனந்தியை மகேஷ் காதலிக்கிறார், இந்த நேரத்தில் அன்புதான் அழகன் என்று மகேஷிடம் சொன்னால் தப்பாகிவிடும் என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.
இதனையடுத்து ஆனந்தி நண்பர்கள் மகேஷிடம் சென்று அழகன் என்பவன் இல்லை, அவனை இனி நினைக்கவே மாட்டேன் என்று ஆனந்தி சொன்னதாக மாற்றி கூறுகிறார்கள். உடனே மகேஷ் மிகவும் சந்தோஷப்படுகிறார்.
அந்தவகையில் இன்றைய ப்ரோமோ வெளியானது. இதில் அன்புவும் ஆனந்தியும் பழைய கார்மென்ட்ஸுக்கு போகிறார்கள். அங்கு கருணாகரன் இருவரிடமும் செம்ம கோபமாக பேசுகிறார். இருவரையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவேன் என்று கூறிவிடுகிறார். அப்போது அன்பு என்ன சார் நேற்று வாங்கியது பத்தலையா என்று கேட்டவுடன் கருணாகரன் மேலும் கோபப்படுகிறார்.
மறுபுறம் கிராமத்தில் ஆனந்தியின் தந்தை 48 நாளுக்குள் நல்லது நடக்கவில்லை என்றால் பெரிய அவமானம் வரும் என்று குடுகுடுப்புக்காரன் சொல்லிவிட்டுப்போனதை தனது மனைவியிடம் வேதனையுடன் சொல்கிறார்.
இதனையடுத்து அன்பு ஆனந்தியை கருணாகரன் திட்டிக்கொண்டிருக்கும்போது மகேஷ் வந்துவிடுகிறார். கருணாகரன் இவர்கள் இங்கு இருந்தால் நான் வெளியே சென்றுவிடுவேன் என்று கூறுகிறார். உடனே மகேஷ் அப்படியென்றால் வெளியே செல்லுங்கள் என்று சொல்லிவிடுகிறார். இது கருணாகரனுக்கு மட்டுமல்ல, மித்ராவுக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. இத்தகைய சூழலில் அன்பு மற்றும் ஆனந்தியின் காதலுக்கு மகேஷ் உதவுவாரா அல்லது பழிவாங்குவாரா என்ற எதிர்பார்ப்புகள் நீடிக்கிறது.