விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் சிந்து பைரவி தொடரின் ஹீரோயின் ரவீனா மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
இப்போதெல்லாம் மக்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பது சீரியல்கள்தான். முன்பெல்லாம் கூட இல்லத்தரசிகளே காலை முதல் இரவு வரை சீரியல்கள் பார்ப்பார்கள். ஆனால், இப்போது இளைஞர்களும் பார்க்கும் வண்ணம் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆகையால் அதற்கேற்றவாரு புது சீரியல்கள் கொண்டுவரப்படுகின்றன.
அந்தவகையில் விஜய் டிவியில் அதிக வருடம் ஒளிப்பரப்பாகி வந்த சீரியல்கள் வரிசையாக முடிவுக்கு வந்துக்கொண்டிருக்கின்றன. புது சீரியல்களின் ப்ரோமோ வெளியாகி வருகின்றன.
சிந்து பைரவி மற்றும் அய்யனார் துணை போன்ற நாடகங்களின் ப்ரோமோ வெளியாகியிருந்தன. அந்தவகையில் சிந்து பைரவி என்ற நாடகத்தின் ப்ரோமோ மூலம் இது இரு தோழிகளின் கதை என்பது தெரியவந்தது.
இதில் ரவீனா ஹீரோயினாக நடித்து வந்திருக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே', 'வீட்டுக்கு வீடு வாசப்படி' போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான திரவியம் ராஜ்குமரன் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் பவித்ரா பி நாயக் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மற்றொரு ஹீரோவாக விஜய் டிவியில் கடந்தாண்டு முடிவுக்கு வந்த 'செல்லம்மா' சீரியலில் அக்ஷிதாவின் கணவராக நடித்த வில்லன் நடிகர் ஆனந்த கிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படியான நிலையில், தற்போது ரவீனா தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே சீரியலை விட்டு விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக ஆர்த்தி சுபாஷ் இந்த சீரியலில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டிப்போட்டியாக இருக்கும் இந்த ஜோடிகள் இடையே நடக்கும் காதல் திருமணத்தில் முடிந்தால்... என்னவெல்லாம் நடக்கும் என புதுமையான கதைக்களத்தோடு இயக்கி உள்ளார் இயக்குனர்.
ரவீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். அதேபோல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார். இதன் பின்னர் வெள்ளித்திரை வாய்ப்புக்கு காத்திருந்த ரவீனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், மீண்டும் சீரியல் பக்கம் சாய்ந்தார். இப்போது திடீரென்று இதிலிருந்து விலகியது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.