சிங்கப்பெண்ணே: ஆனந்தி கர்ப்பமான விஷயத்தை அனைவர் முன்னிலும் அம்பலப்படுத்தும் வில்லன்!

Singappenney
Singappenney
Published on

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கழுத்தில் அன்பு தாலி கட்டுவது போன்று நேற்று முடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆனந்தி கர்ப்பமான விஷயத்தை இன்று அனைவருக்கும் தெரிய வருகிறது.

ஆனந்தியை அன்பு மற்றும் மகேஷ் என இருவரும் காதலிக்கிறார்கள். இது தெரியாமல் ஒரு கட்டத்தில் அன்பு மீது ஆனந்திக்கு காதல் ஏற்படுகிறது. அது மகேஷிற்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து ஆனந்தி திடீரென்று கர்ப்பம் ஆனார். அதற்கு யார் காரணம் என்று அவருக்கே தெரியவில்லை என்பதுபோல் கதை நகர்ந்தது. இதனால், அன்புடன் எனக்கு திருமணம் நடக்கும் என்பதை மறந்து விடுங்கள் என ஆனந்தி அன்புவின் அம்மா லலிதாவிடம் சொல்லி இருந்தாள். ஆகையால், அன்புவின் அம்மா துளசியை உள்ளே கொண்டு வருகிறார். இப்படியே கதை நகர்ந்தது.

ஆனந்தி கர்ப்பமான விஷயம் தோழிகளுக்கும், வாடனுக்கும் மட்டுமே தெரியும். வேறு யாருக்குமே தெரியாது.

இப்படியான நிலையில், ஆனந்தியின் அக்கா கோகிலாவின் திருமண நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆனந்தியும் அன்புவும் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார்கள். இதைப் பார்த்த மகேஷும் துளசியும் வருத்தப்படுகிறார்கள்.

மறுபக்கம் திருமணத்தின் முதள் நாள் இரவே கோகிலாவை சுயம்புலிங்கம் கடத்திவிடுகிறார். அவரிடமிருந்து கோகிலா காப்பாற்றப்பட்டு காலை திருமணம் நடைபெறுகிறது. கோகிலா கழுத்தில் தாலி ஏறும்போது சரியாக ஆனந்தி கழுத்திலும் தாலி ஏறுகிறது. ஆம்! அன்புதான் ஆனந்தி கழுத்தில் தாலியை கட்டுகிறார். இதன்பின்னர் முழு மண்டபமே அதிர்ச்சியில் ஆடிப்போகிறது. அன்புவின் அம்மா மட்டும் சந்தோஷப்படுகிறார்.

இதையும் படியுங்கள்:
வேலை நிமித்தம் பிரிந்திருக்கும் தம்பதிகளா நீங்கள்? உங்கள் உறவை பலப்படுத்த 6 அற்புத விஷயங்கள்!
Singappenney

இன்றைய எபிசோடில் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. அதாவது வில்லன் மண்டபத்திற்கு வந்து ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூற அனைவரும் ஷாக் ஆகிறார்கள். 

குறிப்பாக அன்புக்கும் இப்போதுதான் இந்த விஷயம் தெரிய  வருகிறது. அன்பு இனி இதனை எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com