சிங்கப்பெண்: இறுதி அத்தியாயத்தை நெருங்கும் அழகனின் காதல்!

Singappen Serial
Singappen Serial
Published on

சன்டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண் தொடர் பரபரப்பான திருப்பங்களை நோக்கிச் செல்கிறது. அந்தவகையில் தான்தான் அழகன் என்று ஆனந்தியிடம் அன்பு தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது.

ஆனந்தியுடன் அன்பு சொந்த ஊருக்கு போகும்போது அவளிடம் தான்தான் அழகன் என்று சொல்வதற்கு எவ்வளவோ நேரம் இருந்தது. ஆனால், சுயம்புலிங்கத்தின் திட்டத்திலிருந்து ஆனந்தியை காப்பாற்றவே நேரம் சரியாக இருந்தது.

அதேநேரத்தில்தான் மகேஷ் நானும் ஆனந்தியை காதலிக்கிறேன் என்று அன்புவிடம் சொன்னார். இதனையடுத்து மீண்டும் அன்பு உண்மையை சொல்லப்போகும் நேரத்தில், ஆனந்திக்கு 10 லட்சம் தேவைப்படும் அளவிற்கு ஒரு பிரச்னை வந்தது. இந்த சூழ்நிலையில் ஆனந்திக்கு அன்புவால் உதவி செய்ய முடியவில்லை. அப்போது மகேஷ்தான் அவருக்கு உதவி செய்தார். ஒரு கட்டத்தில் மகேஷ் உடன் இருந்தால்தான் ஆனந்தி சந்தோஷமாக இருப்பாள் என அன்பு முடிவு செய்து விட்டான். அதுமட்டுமில்லாமல் ஆனந்தியின் சந்தோஷத்திற்காக அவளை மகேஷுக்காக விட்டுக் கொடுக்கவும் முன் வந்துவிட்டான்.

இதற்கிடையே அன்புவின் அம்மாவும் எங்கே அவன் ஆனந்தியை காதலித்து விடுவானோ என்ற பயத்தில் கல்யாண ஏற்பாட்டிற்கு தயாராகி வருகிறார். பல சிக்கல்களை எதிர்க்கொள்ளும் அன்பு ஆனந்தியிடமிருந்து சிறிய இடைவெளியை எடுத்துக்கொள்ள முயற்சி செய்கிறார். மேலும் அன்பு வேலையை விட்டு நிற்பதற்கும் முடிவு செய்துவிட்டான். அம்மாவிடம் நான் கம்பெனியை விட்டு நிற்கப் போகிறேன் என்று இன்றைய ப்ரோமோவில் சொல்கிறான்.

இந்த முடிவுக்கு பின், ரோட்டில் தனியாக அன்பு நடந்துக்கொண்டிருக்கும்போது ஆனந்தி வருகிறாள். அன்புவை பார்த்து நாளைக்கு நான் கம்பெனிக்கு வருவேன், நீங்க அங்க வந்து அழகன் யாருன்னு சொல்லணும் என்று ரொம்பவே அழுது கொண்டு சொல்கிறாள்.

இதையும் படியுங்கள்:
அப்போலாம் நடிகர் செந்திலை ரொம்ப கேவலப்படுத்துவாங்க – பாக்யராஜ்!
Singappen Serial

அவள் அழுதது அன்புவை பாதிக்கிறது. அன்பு என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது இன்றைய எபிசோடில்தான் தெரியும். ஒருவேளை ஆனந்தி கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும், தன்னுடைய காதலை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அன்பு நான் தான் அழகன் என்று சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் மகேஷ் தன்னை எப்படியாவது அன்பு ஆனந்தியுடன் சேர்த்து வைத்துவிடுவான் என்ற நம்பிக்கையில் உள்ளான்.

இந்த விஷயங்கள் மகேஷுக்கு தெரிய வந்தால், அவனது முடிவு என்னவாக இருக்கும் என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com